தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.27 லட்சம் கையாடல்

உப்பள்ளி டவுன் ராதாகிருஷ்ணநகர் பகுதியில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

Update: 2017-07-13 23:38 GMT

உப்பள்ளி,

உப்பள்ளி டவுன் ராதாகிருஷ்ணநகர் பகுதியில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் அதேப்பகுதியை சேர்ந்த பயாஸ் அகமது(வயது 28) என்பவர் மேலாளராகவும், மரியப்பா கடாக்(27) ஊழியராகவும் பணியாற்றி வந்தார்கள். இந்த நிலையில் பயாஸ் அகமதுவும், மரியப்பா கடாக்கும் சேர்ந்து, நிதி நிறுவனத்தில் ரூ.27 லட்சம் வரை கையாடல் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த நிதி நிறுவனத்தின் தலைமை மேலாளர் நீலகண்ட கோணி, பயாஸ் அகமது மற்றும் மரியப்பா கடாக் மீது உப்பள்ளி உபநகர் போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பயாஸ் அகமதுவையும், மரியப்பா கடாக்கையும் கைது செய்தனர். அவர்கள் 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்