மதுக்கடைக்கு பூட்டு போட்டு பொதுமக்கள் போராட்டம்
தர்மபுரியில் மதுக்கடைக்கு பூட்டு போட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி,
தர்மபுரி வெண்ணாம்பட்டி ரெயில்வே கேட் அருகே மதுக்கடை செயல்பட்டு வருகிறது. தர்மபுரி நகர பகுதியில் உள்ள மதுக்கடைகள் கோர்ட்டு உத்தரவுப்படி மூடப்பட்டதால் கடந்த சில மாதங்களாக இந்த மதுக்கடைக்கு மதுவாங்க வந்து செல்வோரின் கூட்டம் பல மடங்கு அதிகரித்தது. இதனால் ஏற்கனவே அதிக பொதுமக்கள் போக்குவரத்து கொண்ட வெண்ணாம்பட்டி ரெயில்வே கேட் பகுதி சாலையில் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்தது.
இதன்காரணமாக சுற்றுவட்டாரங்களில் உள்ள குடியிருப்புவாசிகள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள். இந்த நிலையில் இங்கு மதுக்கடை அமைந்துள்ள பகுதியின் அருகே உள்ள மைதானத்தை திறந்தவெளி மதுபானபாராக ஏராளமானோர் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் அந்த பகுதி வழியாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பெண்கள், மாணவ-மாணவிகள் நடமாட முடியாத நிலை உருவானது.
பொதுமக்களை பாதிக்கும் மதுக்கடையை மூடக்கோரி கடந்த மாதம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் மதுக்கடை முன்பு திரண்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் ஒரு மாதத்திற்குள் கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். ஆனால் அதன்பின் ஒருமாதமாகியும் இதுவரை அந்த மதுக்கடையை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை வெண்ணாம்பட்டி ரெயில்வே கேட் அருகே மதுக்கடை முன்பு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் மதுக்கடையை மூடக்கோரி மதுக்கடைக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது உயர் அதிகாரிகளிடம் பேசி கோரிக்கையை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்கள் மதுக்கடைக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.