தீயில் கருகி பெண் பலி பூஜை அறையில் விளக்கேற்றிய போது பரிதாபம்

சுசீந்திரத்தில் பூஜை அறையில் விளக்கேற்றியபோது சேலையில் தீப்பிடித்ததால் தீயில் கருகி பெண் பரிதாபமாக இறந்தார்.

Update: 2017-07-13 22:15 GMT
மேலகிருஷ்ணன்புதூர்,

சுசீந்திரம் கீழதெரு பகுதியை சேர்ந்தவர் முன்னப்ப பிள்ளை. இவரது மனைவி தாயம்மாள்(வயது 60). இவர் தனது மகன் தாணுமாலய பெருமாள் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் தினமும் காலையில் அருகில் உள்ள கோவிலுக்கு செல்வது வழக்கம்.

நேற்று முன்தினம் வழக்கம்போல் கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். பின்னர், வீட்டின் பூஜை அறையில் இருந்த சாமி படத்திற்கு விளக்கு ஏற்றிக்கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக திடீரென விளக்கு சரிந்து தாயம்மாள் மீது விழுந்தது. இதில் அவரது சேலையில் தீப்பற்றிக் கொண்டது. இதைபார்த்த மகன் மற்றும் உறவினர்கள் ஓடிச்சென்று தாயம்மாள் மீது பற்றிய தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால், அதற்குள் தீ மள மளவென பரவியதால் தாயம்மாள் தீயில் கருகி படுகாயம் அடைந்தார்.

உடனே அவரை உறவினர்கள் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தாயம்மாள் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மகன் தாணுமாலய பெருமாள் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரசாத் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் செய்திகள்