இறைச்சிக்காக விற்கும் தடை நீக்கம்: ஈரோடு மாட்டுச்சந்தை களைகட்டியது
இறைச்சிக்காக மாடுகளை விற்கும் தடை நீங்கியதால் ஈரோடு மாட்டுச்சந்தை களைகட்டியது. இதனால் வெளிமாநில வியாபாரிகள் குவிந்தனர்.;
ஈரோடு,
இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்து மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. இதனால் விவசாயிகள் தங்களது மாடுகளை விற்க முடியாமல் பெரும் சிரமம் அடைந்தனர். இந்த பிரச்சினையில் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யும் தடை நீங்கியது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு விவசாயிகளிடையே வரவேற்பை பெற்று உள்ளது.
ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரம்தோறும் வியாழக்கிழமை நடக்கும் மாட்டுச்சந்தையில் கடந்த சில வாரங்களாக குறைவான மாடுகளையே விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு எதிரொலியால் நேற்று நடந்த சந்தையில் ஏராளமான விவசாயிகள் மாடுகளை விற்பனை செய்ய கொண்டு வந்தனர்.
மாட்டுச்சந்தையில் 600 பசு மாடுகளும், 450 எருமை மாடுகளும் என 1,050 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தன. இந்த மாடுகளை விலைபேசி பிடித்துச்செல்ல வெளிமாநில வியாபாரிகளும் ஏராளமானோர் குவிந்தனர். இதனால் மாட்டுச்சந்தை நேற்று களை கட்டியது.
இதுகுறித்து சந்தையின் மேலாளர் முருகன் கூறியதாவது:-
ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையில் சினை மாடுகளும், சமீபத்தில் கன்றுக்குட்டிகளை ஈன்ற மாடுகளும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த மாடுகளை விற்க எந்தவொரு தடையும் மத்திய அரசு விதிக்கவில்லை. இருந்தாலும் விவசாயிகளிடையே ஏற்பட்ட ஒருவித தயக்கத்தினால் தங்களது மாடுகளை விற்பனைக்கு கொண்டு வரவில்லை. இதேபோல் வெளிமாநில வியாபாரிகளின் வருகையும் குறைந்து இருந்தது.
இந்தநிலையில் இறைச்சிக்காக மாடுகளை விற்கும் தடையை நீக்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல வாரங்களுக்கு பிறகு தற்போதுதான் சந்தையில் அதிகமான மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த மாடுகளை மராட்டியம், ஆந்திரா, தெலுங்கானா, கோவா ஆகிய வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் அதிகமாக வந்து விலைபேசி பிடித்து வாகனங்களில் கொண்டு சென்றனர். கேரள மாநிலத்தில் இருந்து வழக்கமாக வரும் வியாபாரிகள் மட்டுமே வந்திருந்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.