கோவில் கரகம் எடுத்து வருவது தொடர்பான பிரச்சினை: ஒரு தரப்பினர் சாலை மறியல்
கோவில் கரகம் எடுத்து வருவது தொடர்பான பிரச்சினையில் ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வரதராஜன்பேட்டை,
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அழகாபுரம் கிராமத்தில் கோவில் பிரச்சினை தொடர்பாக இருதரப்பினரிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த மே மாதம் அந்த கோவிலில் திருவிழாவையொட்டி ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் குட்டகரை ஏரியில் வைத்து கரக குடங்களை தூக்கி கொண்டு வீதி உலா வர முற்பட்டனர். இதையறிந்த மற்றொரு தரப்பினர் குட்டகரையில் இருந்து கரக குடங்களை தூக்கி இந்த வழியாக வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் நிலை உருவானது.
இதையறிந்து ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி மற்றும் போலீசார் இருதரப்பினரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருதரப்பை சேர்ந்த 20 பேர் மீது ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரு தரப்பை சேர்ந்த முக்கிய பிர முகர்களிடம் கோவில் பிரச்சினை சம்பந்தமாக பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தகராறில் ஈடுபடமாட்டோம் என கையெழுத்தும் பெற்று கொண்டனர்.
இந்த நிலையில் குட்டகரையில் இருந்து கரக குடம் எடுத்து செல்வதை தடுக்க வேண்டும். மேலும் போலீசார் ஊர் மக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூறி துணை போலீஸ் சூப்பிரண்டின் நடவடிக்கையை கண்டித்து ஒரு தரப்பினர் நேற்று அழகாபுரம்-ஆண்டி மடம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். ஆண்டிமடம் தாசில்தார் ராஜமூர்த்தி மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப் படுத்தினர். அதனை தொடர்ந்து மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.