முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்த சிறை காவலருக்கு 3 ஆண்டு ஜெயில்
முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்த சிவகங்கை சிறை காவலருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.;
பொள்ளாச்சி,
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள வேடசந்தூரை சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மகன் டேவிட் ரஞ்சித்குமார் (வயது 35). இவர் தற்போது சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சப்-ஜெயிலில் காவலராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது.
இவர் பழனியில் சிறைத்துறை காவலராக வேலை பார்த்தபோது, பொள்ளாச்சி தன்னாச்சியப்பன் கோவில் வீதியை சேர்ந்த ரேவதி என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யுக்திகா (10) என்ற மகள் உள்ளார்.
இதற்கிடையில் டேவிட் ரஞ்சித்குமார், ரேவதியை அடித்து, கொடுமைப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவர், முதல் திருமணத்தை மறைத்து 2-வதுதிருமணம் செய்தது ரேவதிக்கு தெரியவந்தது. இதுகுறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 2011-ம் ஆண்டு ரேவதி புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை பொள்ளாச்சி ஜே.எம்-1 மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் போது டேவிட் ரஞ்சித்குமார் தனக்கு திருமணம் ஆகவில்லை என்றும், யுக்திகா எனது மகள் இல்லை என்றும் கூறினார்.
இதையடுத்து அவருக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது யுக்திகா அவரது மகள் தான் என்று தெரியவந்தது. திருமணம் செய்ததற்கான சாட்சிகள் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன.
இந்த நிலையில் இந்த வழக்கு பொள்ளாச்சி கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பச்சியப்பன் குற்றம்சாட்டப்பட்ட டேவிட் ரஞ்சித்குமாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், குழந்தை யுக்திகா பெயரில் 3 மாதத்திற்குள் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்யவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் குற்றவியல் வக்கீல் சுரேஷ்குமார் ஆஜராகி வாதாடினார்.