திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான கபடி போட்டியில் அரசு பள்ளிகள் வெற்றி

திருப்பூரில் நடைபெற்ற தெற்கு குறுமைய அளவிலான கபடி போட்டியில் அரசு பள்ளிகள் வெற்றி பெற்றன.

Update: 2017-07-13 22:00 GMT
திருப்பூர்,

திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான மாணவர்களுக்கான கபடி போட்டியில் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் இடுவம்பாளையம் அரசு பள்ளியும், 17, 19 வயதுக்குட்பட்டோர் பிரிவுகளில் கே.எஸ்.சி. அரசு பள்ளியும் வெற்றி பெற்றன. கேரம் போட்டியில் மாணவர்கள் (ஒற்றையர்) 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கதிரவன் பள்ளியும், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் காந்தி வித்யாலயா பள்ளியும், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் விவேகானந்தா வித்யாலயா பள்ளியும் வெற்றி பெற்றன. இரட்டையர் பிரிவில் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஆசாத் மெட்ரிக்பள்ளியும், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் காந்தி வித்யாலயா பள்ளியும், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் விவேகானந்தா வித்யாலயா பள்ளியும் வெற்றி பெற்றன.

மாணவிகளுக்கான வளையபந்து போட்டி (ஒற்றையர்) 14 வயதுக்குட்பட்டோர், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவுகளில் பிரண்ட்லைன் அகாடமி பள்ளியும், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் லிட்டில் பிளவர் பள்ளியும் வெற்றி பெற்றன. (இரட்டையர்) 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் செஞ்சுரி பவுண்டேசன் பள்ளியும், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பிரண்ட்லைன் அகாடமி பள்ளியும், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வித்யவிகாசினி பள்ளியும் வெற்றி பெற்றன.

வடக்கு குறுமைய அளவிலான இறகு பந்து போட்டியில், மாணவர்கள் (ஒற்றையர்) 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் இன்பெண்ட் ஜீசஸ் பள்ளியும், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சசூரி பள்ளியும், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கொங்கு மெட்ரிக்பள்ளியும் வெற்றி பெற்றன. (இரட்டையர்) 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் இன்பெண்ட்ஜீசஸ் பள்ளியும், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சசூரி பள்ளியும், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கொங்கு மெட்ரிக் பள்ளியும் வெற்றி பெற்றன.

மாணவிகள் (ஒற்றையர்) 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பாரதி கிட்ஸ் பள்ளியும், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் இன்பெண்ட்ஜீசஸ் பள்ளியும், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சுப்பையா மெட்ரிக் பள்ளியும் வெற்றி பெற்றன. இரட்டையர் பிரிவில் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பாரதி கிட்ஸ் பள்ளியும், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கொங்கு மெட்ரிக் பள்ளியும், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஜெய்சாரதா மெட்ரிக் பள்ளியும் வெற்றி பெற்றன.

மேலும் செய்திகள்