பா.ம.க. உறுப்பினர் சேர்க்கையில் கடலூர் முதன்மை மாவட்டமாக திகழ வேண்டும்

பா.ம.க. உறுப்பினர் சேர்க்கையில் கடலூர் முதன்மை மாவட்டமாக திகழ வேண்டும் என்று கடலூரில் நடந்த அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Update: 2017-07-13 22:30 GMT
கடலூர்,

கடலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. செயற்குழு கூட்டம் கடலூரில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் செல்வசோழன், ராஜேந்திரன், சுதாகர், முரளி, பாரதிராஜா மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஏ.சி.மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் சந்திரசேகரன் வரவேற்று பேசினார்.

மாநில இணை பொதுச்செயலாளர் இசக்கி படையாச்சி, மாநில அமைப்பு செயலாளர் செல்வகுமார், மாநில துணைபொதுச்செயலாளர் பழ.தாமரை கண்ணன், கடலூர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் கருணாநிதி, மாநில துணைத்தலைவர் சண்முகம், சட்டப் பாதுகாப்புக்குழு செயலாளர் தமிழரசன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். மாவட்ட அமைப்பு செயலாளர் வெங்கடேசன், மாவட்ட தலைவர் ராஜ்குமார், மாநில வன்னியர் சங்க துணைத்தலைவர் தனசேகர், மாநில மாணவர் சங்க செயலாளர் கோபிநாத், எஸ்.ராமச்சந்திரன், ரத்தினவேல், விஜயவர்மன், விஜய், பார்த்திபன், வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
16-ந்தேதி 29-ம் ஆண்டு பா.ம.க. தொடக்க விழாவையொட்டி ஒவ்வொரு கிளையிலும் கொடியேற்றம், கிளைக்கூட்டம், பொதுக்கூட்டம் சிறப்பாக நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது. உறுப்பினர் சேர்க்கையில் இந்த வருடமும் கடலூர் மாவட்டம் முதன்மை மாவட்டமாக திகழ வேண்டும். உறுப்பினர் சேர்க்கையை விரைவில் முடித்து பட்டியலை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசிடமும், அன்புமணி ராமதாசிடமும் வழங்க வேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் மாவட்ட இளைஞர் அணி தலைவர் வாட்டர் மணி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்