பணி நிரந்தரம் செய்யப்படாததால் விரக்தி அரசு பஸ் ஒப்பந்த டிரைவர் தற்கொலை
பணி நிரந்தரம் செய்யப்படாததால் விரக்தி அடைந்த அரசு பஸ் ஒப்பந்த டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவொற்றியூர்,
மதுரை மாவட்டம் அஸ்தினாபுரம் முனியாண்டி தெருவைச் சேர்ந்தவர் கருப்பு ராஜா(வயது 36). இவர், சென்னை அண்ணா நகர் அரசு போக்குவரத்து பணி மனையில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
தற்போது எண்ணூர் சுனாமி குடியிருப்பு 40–வது பிளாக்கில் இவர் வசித்து வந்தார். தன்னை பணி நிரந்தரம் செய்யக்கோரி கேட்டு வந்தார். ஆனால் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.
இதனால் மனம் உடைந்த நிலையில் காணப்பட்ட கருப்பு ராஜா, தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
* குடிப்பழக்கத்தை பெற்றோர் கண்டித்ததால் சென்னையை அடுத்த சேலையூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ்(26) நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.* ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த காவலாளியான டேவிட்ராஜ்(32) வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம மனிதர்கள் அங்கு இருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரத்தை திருடி சென்றனர்.
* சென்னை ஐஸ் அவுஸ் பகுதியை சேர்ந்த பெரோஸ்பாஷா(32) நேற்றுமுன்தினம் இரவு தோழிகளுடன் மெரினா கடற்கரைக்கு சென்றார். அங்கு அவரது தோழிகளை கேலி செய்ததை தட்டிக்கேட்டது தொடர்பாக 2 பேர் பெரோஸ்பாசாவை கத்தியால் குத்திவிட்டு தப்பினர்.
* நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் நேற்று மாலை திடீர் தீவிபத்து ஏற்பட்டது. உடனடியாக ஊழியர்கள் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் தீயை பரவாமல் அணைத்தனர்.
மாநகராட்சி ஊழியர் பலி* காசிமேட்டில் மணிகண்டன்(23) என்பவருடன் வசித்து வந்த திருநங்கை நிக்கேஷ் என்ற நிஷா(24) மாயமாகி விட்டதாக போலீசில் திருநங்கை திவ்யா புகார் அளித்து உள்ளார்.
* ஆவடி பகுதியை சேர்ந்த மாநகராட்சி ஊழியரான அசோக்குமார்(33) நேற்று பூந்தமல்லி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது லாரி மோதியதில் பலியானார். இதுதொடர்பாக லாரி டிரைவர் மணிவேல்(33) கைதானார்.
* சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த ரத்தினம்(48) என்ற பெண்ணை அதே பகுதியை சேர்ந்த முனுசாமி என்பவர் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி போலீசார் விசாரிக்கிறார்கள்.