கார் டிரைவர் தற்கொலை காரணம் குறித்து போலீசார் விசாரணை

சாத்தான்குளம் அருகே உள்ள ஞானியார்குடியிருப்பைச் சேர்ந்த முருகன் மகன் செல்வகுமார் (வயது 23). இவர் சென்னையில் சொந்தமாக கார் வாங்கி, வாடகைக்கு ஓட்டி வந்தார்.

Update: 2017-07-13 20:30 GMT

சாத்தான்குளம்,

சாத்தான்குளம் அருகே உள்ள ஞானியார்குடியிருப்பைச் சேர்ந்த முருகன் மகன் செல்வகுமார் (வயது 23). இவர் சென்னையில் சொந்தமாக கார் வாங்கி, வாடகைக்கு ஓட்டி வந்தார்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் அவர், அப்பகுதியில் உள்ள தனது தோட்டத்துக்கு சென்று, அங்கு பதனீர் காய்ச்சும் குடிசையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று முன்தினம் மாலையில் முருகன் தோட்டத்துக்கு சென்றபோது, அங்கு தன்னுடைய மகன் தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், சாத்தான்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். செல்வகுமாரின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்