அரசு மருத்துவமனைகளில் பயோமெட்ரிக் கருவி

அரசு மருத்துவமனைகளில் வருகைபதிவிற்காக பயோமெட்ரிக் கருவி விரைவில் பொருத்தப்படும் என சுகாதாரத்துறை மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.;

Update:2017-07-13 04:35 IST

மும்பை

சுகாதாரத்துறையை சேர்ந்த அதிகாரிகளுடன் அரசு மருத்துவ சேவையை மேம்படுத்துவது குறித்து சுகாதாரத்துறை மந்திரி தீபக் சாவந்த் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் குறியதாவது:–

மராட்டியத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் பெரும்பாலான மருத்துவர்கள் பணி நேரத்தில் மருத்துவமனையில் இருப்பதில்லை என்ற பொதுவான புகார் மக்களிடம் உள்ளது. இதனால் சிகிச்சைகாக அரசு மருத்துவமனைகளை நாடும் ஏழை, எளிய மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

இதை தடுக்க மராட்டியத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் விரையில் டாக்டர்களின் வருகையை பதிவுசெய்ய பயோமெட்ரிக் கருவி பொருத்தப்படும். அதில் வருகையை பதிவு செய்யவர்களை நோட்டமிட அருகிலேயே கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்படும்.

இது அரசு மருத்துவர்களிடம் காலம் தவறாமையையும், மருத்துவசேவையை மேம்படுத்தவும் பெரிதும் உதவும்.

பயோமெட்ரிக் கருவி பொருத்துவதால் சரியாக வருகைப்பதிவு, மருத்துவ ஊழியர்களின் பணிபுரியும் நேரம் போன்றவற்றை எளிதாக கண்காணிக்க முடியும். சுகாதாரத்துறையில் உள்ள இதுபோன்ற பிரச்சினைகளை தீர்க்க பல்வேறு வகைகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது ஒரு தொடக்கமே இனி வரும் காலங்களில் மேலும் பல திட்டங்கள் மூலம் சிறப்பான சேவையை வழங்க முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்