பூரணாங்குப்பத்தில் திரவுபதி அம்மன், அர்ச்சுனன் திருக்கல்யாணம்

புதுவை மாநிலம் பூரணாங்குப்பத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவிலின் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 10–ந் தேதி கரகத்திருவிழாவும், 11–ந் தேதி பக்காசூரனுக்கு சோறு போடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Update: 2017-07-12 21:58 GMT

பாகூர்,

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடைபெற்றது. அதனைதொடர்ந்து திரவுபதி அம்மன், அர்ச்சுனன் திருக்கல்யாணம் நடந்தது. இதில் அரசு கொறடா அனந்தராமன், மக்கள் இயக்க தலைவர் ஏம்பலம் செல்வம் உள்பட கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தீமிதி உற்சவம் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை நடக்கிறது. நாளை மறுநாள் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டும், இரவில் தெப்பல் உற்சவமும் நடக்கிறது. இத்துடன் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா நிறைவு பெற்றது


மேலும் செய்திகள்