காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளிப்பு கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு
குளச்சல் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்த சம்பவம் தொடர்பாக கணவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குளச்சல்,
குளச்சல் அருகே உள்ள வாணியக்குடியை சேர்ந்தவர் சுஜின் (வயது26), மீன்பிடி தொழிலாளி. இவரும், அதே பகுதியை சேர்ந்த ரேணு (20) என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு சுஜின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும், எதிர்ப்பை மீறி அவர்கள் இருவரும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பின்பு சுஜின் வீட்டிலேயே கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர். ரேணுவை அவரது கணவர் சுஜின், மாமியார் ரீத்தம்மாள், உறவினர் சுஜி ஆகியோர் கொடுமைபடுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த ரேணு நேற்று முன்தினம் தன்மீது மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.
பலத்த தீக்காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குளச்சலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ரேணுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ரேணு, குளச்சல் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் கணவர், மாமியார், உறவினர் ஆகியோரின் கொடுமை காரணமாக தற்கொலைக்கு முயன்றாக கூறியுள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் கணவர் சுஜின் உள்பட 3 பேர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.