அணுகு சாலை அமைக்க கோரி 4-வது நாளாக உண்ணாவிரதம்

திருவெறும்பூரில் அணுகு சாலை அமைக்க கோரி 4-வது நாளாக உண்ணாவிரதம்;

Update: 2017-07-12 22:45 GMT
திருவெறும்பூர்,


திருச்சி பழைய பண்ணை முதல் துவாக்குடி வரை அணுகு சாலை அமைக்க கோரி சர்வீஸ் சாலை மீட்பு குழு மற்றும் அந்தந்த பகுதியில் உள்ள நலசங்க நிர்வாகிகள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். 4-ம் நாளான நேற்று திருவெறும்பூர் தீனதயாளுநகர், இந்திரா நகர், எறும்பீஸ்வரர் நகர், ஐ.ஏ.எஸ்.நகர், தென்றல் நகர், விஜயநகரம், அம்பேத்கர் நகர், மாரியம்மன் கோவில் தெரு, சோழபுரம், மாரிஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நல சங்க நிர்வாகிகள், பெண்கள் என திரளானோர் உண்ணாவிரதம் இருந்தனர். காலையில் உண்ணாவிரதத்தை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தொடங்கி வைத்து அணுகு சாலை குறித்து பேசினார். 

மேலும் செய்திகள்