வேகத்தடை அமைக்க கோரி கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்
வேகத்தடை அமைக்க கோரி கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து கல்லூரி முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் கல்லூரி முன்பு வேகத்தடை அமைக்க வேண்டும், குடிநீர் வசதி வேண்டும், கழிவறை வசதி செய்து தர வேண்டும், மடிக்கணினி வழங்க வேண்டும். கல்வி ஊக்கத் தொகை வழங்க வேண்டும், போதுமான கட்டிட வசதி செய்து தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இந்த போராட்டத்தை பற்றி அறிந்த கல்லூரி முதல்வர் தியாகராஜன் சம்பவ இடத்துக்கு வந்து மாணவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். மாணவர்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.