கதிராமங்கலத்தில் பொது மக்கள் தாக்கப்படுவதை கண்டித்து மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கதிராமங்கலத்தில் பொது மக்கள் தாக்கப்படுவதை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2017-07-12 23:00 GMT
திருச்சி,

இந்திய மாணவர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட குழு சார்பில் நேற்று காலை ஈ.வெ.ரா. கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் வருகிற 17-ந்தேதி மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு நடக்கும் கலந்தாய்வை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்திற்கு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

கதிராமங்கலத்தில் பொது மக்கள் தாக்கப்படுவதை கண்டிப்பது, மேலும் அங்கு உள்ள மக்கள் மத்தியில் சுமுக தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் முன் வைத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்