அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Update: 2017-07-12 23:00 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில் சுழற்சி 1 மற்றும் 2-ல் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் கடந்த 3 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கவுரவ விரிவுரையாளர்களின் பணி அனுபவத்தினை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 3-வது நாளாக நேற்று நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு சங்க தலைவர் செந்தில் தலைமை தாங்கினார். செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். இதில் கதிரவன், முரளி, மூவேந்தன், ஜான்கிறிஸ்டோபர், ராஜா, சென்னகிருஷ்ணன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் கலந்துகொண்டனர். போராட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

மேலும் செய்திகள்