சேலம் அரசு கலைக்கல்லூரி முன்பு கருப்பு பேட்ஜ் அணிந்து உதவி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் சங்கம் சார்பில் சேலம் அரசு கலைக்கல்லூரி முன்பு நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நிர்வாகக்குழு உறுப்பினர் உமா தலைமை தாங்கினார். சங்க செயலாளர் மணிகண்டன், துணைத்தலைவர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Update: 2017-07-12 22:00 GMT
சேலம்,

தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் பணியாற்றி வரும் 3,446 தற்காலிக உதவி பேராசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், பல்கலைக்கழக மானியக்குழு தீர்மானித்துள்ள குறைந்தபட்ச தொகுப்பூதியம் ரூ.25 ஆயிரம் வழங்கக் கோரியும் இந்த ஆர்ப் பாட்டம் நடந்தது.

இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக் கைகளை வலியுறுத்தி கோஷங் கள் எழுப்பினர். இதே கோரிக் கைகளை வலியுறுத்தி இன்று (வியாழக்கிழமை) கல்லூரி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட போவதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்