சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயற்சி
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது, அவர்கள் நிலத்தை அபகரித்துவிட்டதாக தி.மு.க. நிர்வாகி மீது புகார் தெரிவித்தனர்.
சேலம்,
சேலம் அருகே பெருமாம்பட்டி கிள்ளன்வட்டம் பகுதியை சேர்ந்த 15 பேர் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். அப்போது அங்கு வந்தவர்களில் 4 பேர் திடீரென தங்களது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்ததும், கலெக்டர் அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பெருமாம்பட்டியை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மனைவி பழனியம்மாள், இவரது மகன் ரமேஷ் (வயது 26), மருமகள் சசிகலா (23), இவர்களது 2 வயது குழந்தை மோனிகா ஆகியோர் என்பதும், இவர்கள் நிலப்பிரச்சினை தொடர்பாக கலெக்டர் அலுவலகத்திற்கு மனுகொடுக்க வந்து தீக்குளிக்க முயன்றதும் தெரியவந்தது.
அப்போது, பழனியம்மாள் கதறி அழுதபடி அங்கிருந்த போலீஸ்காரர்களின் காலில் விழுந்து, எங்களது சொத்தை எப்படியாது மீட்டுத்தாருங்கள் எனக்கூறி கெஞ்சினார். பின்னர், அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவருடன் வந்திருந்த உறவினர்கள் சிலர் பழனியம்மாளுக்கு தண்ணீர் கொடுத்து ஆறுதல் கூறினார்கள்.
எனது மாமனார் பெரிய அய்யம்பெருமாள். அவருக்கு வயது 100 ஆகும். அவருக்கு லட்சுமி, பாப்பா என 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி லட்சுமிக்கு கோவிந்தராஜ், தங்கராஜ், கந்தசாமி மற்றும் எனது கணவர் மாரிமுத்து ஆகிய 4 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். 2-வது மனைவி பாப்பாவிற்கு 5 மகன்கள் உள்ளனர். பெரிய அய்யம்பெருமாளுக்கு சொந்தமாக 2 ஏக்கர் 90 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அவர்களது வாரிசுகள் 10 பேருக்கும் சமமாக பிரித்து கொள்ள முடிவு செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். அதன்படி கோர்ட்டில் வழக்கும் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், பாப்பாவின் வாரிசுதாரர்கள் தன்னிச்சையாக முடிவெடுத்து, எங்களுக்கு தெரியாமல் வீட்டில் கட்டிலில் படுத்திருந்த மாமனார் பெரிய அய்யம்பெருமாளை அப்படியே தூக்கிச்சென்று தி.மு.க.நிர்வாகி ஒருவருக்கு மொத்தமுள்ள நிலத்தில் 1 ஏக்கர் 30 சென்ட் நிலத்தை கிரயம் செய்து விற்றுள்ளனர். அதற்கான பத்திரப்பதிவு கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்தது. தி.மு.க.பிரமுருக்கு விற்பனை செய்யப்பட்ட நிலத்தில் எங்களது வீடுகளும் அடங்கும். இது குறித்து இரும்பாலை போலீசில் புகார் செய்தோம். ஆனால் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நாங்கள் அனைவரும் குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளோம். கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது எப்படி ஒருதரப்பினர் மட்டும் நிலத்தை கிரயம் செய்து கொள்ள முடியும். எங்களது பிரச்சினையில் பஞ்சாயத்து பேச வந்த தி.மு.க.பிரமுகர் திட்டமிட்டு எங்களது நிலத்தை அபகரித்துவிட்டார். எனவே, அவர் செய்த பத்திரப்பதிவை
ரத்து செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நிலப்பிரச்சினை தொடர்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.