‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2017-07-12 22:30 GMT

விழுப்புரம்,

ஆர்ப்பாட்டத்திற்கு விழுப்புரம் மண்டல திராவிடர் கழக தலைவர் தாஸ் தலைமை தாங்கினார். செயலாளர் கோபண்ணா அனைவரையும் வரவேற்றார். ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரியும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதுதொடர்பாக நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதலை மத்திய, மாநில அரசுகள் பெற்றுத்தரக்கோரியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ், மாவட்ட பொருளாளர் புகழேந்தி, முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ் ஆகியோர் கலந்து கொண்டு விளக்க உரையாற்றினார்கள்.

இதில் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. அங்கையற்கன்னி, மாவட்ட துணை செயலாளர் முத்தையன், நகர தலைவர் சக்கரை, பொதுக்குழு உறுப்பினர் பஞ்சநாதன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர்கள் சுப்பிரமணியன், ஏழுமலை, திராவிடர் கழக மாவட்ட தலைவர்கள் ப.சுப்பராயன், கந்தசாமி, ம.சுப்பராயன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் அமீர்அப்பாஸ், த.மு.மு.க. தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் அனிபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்