கோபியில் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரி கோபியில் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2017-07-12 21:45 GMT

கோபி,

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரும் தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்றுத்தர மத்திய–மாநில அரசுகளை வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் 12–ந் தேதி (நேற்று) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிவித்து இருந்தார். அதன்படி நேற்று கோபி பஸ் நிலையத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நல்லசிவம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சி பொறுப்பாளர்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்