பெரம்பூரில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை தாயார் திட்டியதால் விபரீத முடிவு
பெரம்பூரில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தாயார் திட்டியதால் அவர் இந்த விபரீத முடிவை எடுத்தார்.;
பெரம்பூர்,
பெரம்பூர் வீனஸ் முகமது தெருவைச் சேர்ந்தவர் பையாஸ் அகமது. தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி மசிதாபேகம். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இவர்களது மகன் சையத் அகமது (வயது 18) சென்னையில் உள்ள நியூ கல்லூரியில் பி.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு நேற்று முன்தினம் கல்லூரிக்கு மதிய உணவாக தாயார் உப்புமா செய்து கொடுத்தார். ஆனால் உப்புமா தனக்கு பிடிக்காது என்றும் வேறு உணவு தயார் செய்து தருமாறும் சையத் அகமது, தனது தாயாரிடம் கேட்டதாக தெரிகிறது.
தாயார் திட்டியதால் தற்கொலை
இதற்கு அவரை தாயார் திட்டியதாக தெரிகிறது. பின்னர் அவர் தனது மகளுக்கு சாப்பாடு கொடுப்பதற்காக, பள்ளிக்கு சென்று விட்டார். அங்கு இருந்து வீடு திரும்பிய அவர், மகனுக்கு மதிய உணவாக கொடுத்த உப்புமா வீட்டில் இருந்தது. மகன் சாப்பாடு எடுத்து செல்லவில்லை என்று தாயார் நினைத்துக்கொண்டார்.
பின்னர் மதியம் 3 மணிக்கு மகனுக்கு தாயார் மசிதாபேகம் போன் செய்தார். அப்போது மகனின் செல்போன் அழைப்பு சத்தம் வீட்டின் அறையில் இருந்து கேட்டது. இதைத்தொடர்ந்து மகன் வீட்டில் தான் இருக்கிறான் என கருதிய அவர் அந்த அறை கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அவர் வீட்டு கதவை உடைத்து சென்று பார்த்தபோது, அங்கு சையத் அகமது மின் விசிறியில் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து திரு.வி.க நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெயில் மோதி 2 பேர் சாவு
* பெரம்பூரில் நேற்று எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் நெல்சன்மாணிக்கம் ரோட்டை சேர்ந்த ரவிசங்கர்(62) பலியானார். இதேபோல வில்லிவாக்கம் ரெயில் நிலையம் அருகே அதேபகுதியை சேர்ந்த சுஜாராமி(35) என்ற பெண் ரெயில் மோதி பலியானார்.
* வில்லிவாக்கம் கம்பர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து சூதாடியதாக ஆறுமுகம்(35), ராஜா(43), முருகன்(41) உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
* அம்பத்தூர் சி.டி.எச். சாலையில் உள்ள சத்யா(30) என்பவரது சலூன் கடையின் பூட்டை உடைத்து ரூ.21 ஆயிரத்தை மர்ம மனிதர்கள் திருடி சென்றனர்.
பொதுமக்கள் போராட்டம்
* துரைப்பாக்கம் 193-வது வட்டத்திற்குட்பட்ட வெங்கடேஸ்வரநகர், கற்பகவிநாயகர் பகுதி மக்கள் குடிநீர் கேட்டு மெட்ரோ வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் அளித்த உறுதியை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.
* ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த பிரகாஷ்மெருகந்தி(52) என்பவரை கத்தியைக்காட்டி செல்போன் பறித்ததாக கோபாலகிருஷ்ணன்(25) உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
* ஆவடி பகுதியை சேர்ந்த ரமேஷ்பாபு(47) என்பவரது வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்த மர்ம ஆசாமி அங்கு இருந்த 15 பவுன் நகையை திருடி சென்றான்.
* அயனாவரத்தை சேர்ந்த வரதராஜ்(32) என்பவர் நேற்று முன்தினம் கே.எச்.ரோட்டில் சென்றபோது அவரை கத்தியைக்காட்டி மிரட்டி செல்போனை பறித்ததாக கணேசன்(21), சூர்யா(19) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.