பிளாஸ்டிக் அரிசி சமைக்கப்பட்டதா? அதிகாரிகள் சமைத்த போது தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
தக்கலையில் பிளாஸ்டிக் அரிசி சமைக்கப்பட்டதாக பரபரப்பு எழுந்துள்ளது. அதிகாரிகள் அதை ஒரு பாத்திரத்தில் வைத்து சுட வைத்த போது, திடீரென அந்த அரிசி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;
தக்கலை,
குமரி மாவட்டம் தக்கலையை அடுத்த அழகியமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் ஜோசப் (வயது 58). காங்கிரஸ் பிரமுகரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகர்கோவில் மார்க்கெட் பகுதியில் ஒரு கடையில் தலா 10 கிலோ எடை கொண்ட 3 அரிசி பைகளை வாங்கினார். அந்த அரிசியில் சமையல் செய்த போது அவருக்கு ஒவ்வாமையும், வயிற்று வலியும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் தான் வாங்கி வந்த அரிசி தரமற்றதாக இருக்கும் என கருதிய டாக்டர் ஜோசப், அதுபற்றி தக்கலை உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் அந்த அரிசியை தண்ணீரில் போட்டு சோதனை செய்தனர்.
தண்ணீரில் அந்த அரிசி மிதந்ததாகவும், உடனடியாக அந்த அரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு சூடுபடுத்தி அதை சமைக்க முயன்றனர். அப்போது, அந்த அரிசி தீப்பற்றி நெருப்பு பந்தாக எரிந்ததாக தெரியவருகிறது.
இதைக்கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே டாக்டர் ஜோசப் வாங்கி வந்த 3 அரிசி பைகளையும் சோதனையிட்டனர். அதில் ஒரு அரிசி பையில் மட்டும், ஒரு நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டு, அதில் தொடர்புகொள்ள வேண்டிய எண் என, 9 இலக்க போன் எண் கொடுக்கப்பட்டு இருந்தது. மற்ற 2 பைகளிலும் 10 இலக்க போன் எண் இருந்தது. எனவே 9 இலக்க போன் எண் கொண்ட பையில் இருந்த அரிசி தரமற்றதாக இருந்திருக்கலாம் என அதிகாரிகள் கருதுகிறார்கள்.
அதே நேரத்தில் அந்த பையில் இருந்தது பிளாஸ்டிக் அரிசி எனவும், டாக்டர் ஜோசப் அந்த அரிசியை சமைத்து சாப்பிட்டதால்தான் அவருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதாகவும் அந்த பகுதியில் தகவல் பரவியது.
இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த பையில் இருந்த அரிசியின் மாதிரியை எடுத்து, ஆய்வக பரிசோதனைக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் அதிகாரிகள் கூறும் போது, “இந்த அரிசி தரமற்ற அரிசியாக உள்ளது. பிளாஸ்டிக் அரிசி என கூறப்படுவது குறித்தும் விசாரித்து வருகிறோம். பரிசோதனை முடிவு வந்த பிறகே அது பற்றி கூற முடியும். தரமற்ற அரிசியை விற்ற நிறுவனம் மீது நடவடிக்கை எடுகப்படும்“ என்றனர்.