குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்
மணல்மேடு அருகே குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மணல்மேடு,
நாகை மாவட்டம், மணல்மேடு அருகே சேத்தூர் ஊராட்சியை சேர்ந்த உடையூர் பருத்திக்குடி கிராமம் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடும் வறட்சியின் காரணமாக இந்த கிராமத்தில் கடந்த ஒரு ஆண்டாக நிலத்தடிநீர் மட்டம் மிகவும் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் குடிநீருக்காக நீண்டதூரம் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இக்கிராமத்திற்கு செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதைத்தொடர்ந்து உடையூர் பருத்திக்குடி கிராம மக்கள் தங்களது கிராமத்திற்கு குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நேற்று மணல்மேடு அருகே சேத்தூர் மெயின்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தட்டுப்பாடின்றி உடனே குடிநீர் வழங்க வேண்டும், சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை தாசில்தார் காந்திமதி மற்றும் மணல்மேடு போலீசார் மேற்கண்ட இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், விரைவில் பொதுமக்கள் கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சீர்காழி - மணல்மேடு சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.