கதிராமங்கலம் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மயிலாடுதுறையில் கடையடைப்பு

கதிராமங்கலம் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மயிலாடுதுறையில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

Update: 2017-07-11 23:00 GMT
மயிலாடுதுறை,

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்குழாய் கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இதனால் நிலத்தடிநீர் மாசுபடுவதால் பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி கச்சா எண்ணெய் எடுக்கும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கதிராமங்கலத்தை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் தொடர்ந்து 11-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் கதிராமங்கலம் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மயிலாடுதுறையில் வர்த்தகர்கள் சங்கம் சார்பில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடை பெற்றது. அதன்படி மயிலாடுதுறை நகரில் உள்ள பட்டமங்கலத்தெரு, காந்திஜி சாலை, நாராயணப்பிள்ளை தெரு, பெரியக்கடை தெரு, கச்சேரி ரோடு உள்ளிட்ட முக்கிய கடைவீதிகளில் உள்ள நகை கடைகள், ஜவுளி கடைகள், மளிகை கடைகள், பாத்திர கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகள் உள்ளிட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடையடைப்பால் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. 

மேலும் செய்திகள்