கதிராமங்கலம் கிராமத்தில் நிலத்தடி நீர் அமிலமாக மாறி வருகிறது சீமான் பேட்டி
கதிராமங்கலம் கிராமத்தில் நிலத்தடி நீர் அமிலமாக மாறி வருகிறது என்று ஆய்வு அறிக்கையை வெளியிட்டு சீமான் கூறினார்.
திருச்சி,
மீத்தேன், ஈத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்கிறோம் என கூறி ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தமிழக நிலங்களில் 11 ஆயிரம் முதல் 12 ஆயிரம் அடி வரை பூமியை துளைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இயற்கை அன்னையின் ஈரக்குலையை நாசமாக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். கதிராமங்கலம் கிராமத்தில் இந்திய எண்ணெய் கழகம் தோண்டி உள்ள ஆழ்குழாய் கிணறுகளால் அந்த பகுதியின் நிலத்தடி நீராதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு விட்டது. அப்பகுதி தண்ணீர் அமிலமாக மாறி வருகிறது.
அந்த தண்ணீரை ஒரு ஆய்வகத்தில் பரிசோதனை செய்துள்ளோம். இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து எண்ணெய் எடுக்கும் திட்டப்பணியை தடுத்து நிறுத்துவோம். மத்திய, மாநில அரசு அதிகாரிகள் நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்படாது என பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
தமிழகத்தில் மீத்தேன், ஈத்தேன் வாயு எடுக்கும் திட்டங்கள் செயல்படுத்தப் பட்டால் எத்தியோப்பியா போல் நமது மாநிலமும் பஞ்சப்பிரதேசமாகி விடும்.
நாங்கள் எண்ணெய் எடுக்கும் திட்டங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. மேலை நாடுகளில் உள்ளதுபோல் மாற்று முறையை பயன்படுத்தி எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை வெளியே எடுக்க வேண்டும்.
குஜராத் மாநிலத்திலும், கங்கை கரையிலும் தமிழகத்தை விட அதிகமான இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் உள்ளன. பிரதமர் மோடி முதலில் அங்கு அதனை எடுக்க உத்தரவிட வேண்டும். மு.க.ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக இருந்த போது தான், மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கு கையெழுத்திட்டு உள்ளார். அந்த நேரத்தில் ஜெயலலிதா தலைமையில் வலுவான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. இருந்தது. ஆனால் அப்போது அதனை அ.தி.மு.க. எதிர்க்கவில்லை, அது ஏன்? என்று கேட்க விரும்புகிறேன்.
பேட்டியின்போது கதிராமங்கலம் கிராமத்தில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீரை ஆய்வு செய்து பெறப்பட்ட அறிக்கையை சீமான் வெளியிட்டார்.