விவசாயம் அல்லாத பயன்பாட்டிற்கு கொடுக்கப்படும் உரங்களுக்கு மானியம் பெறுவது தடுக்கப்படும்
விவசாயம் அல்லாத பயன்பாட்டிற்கு கொடுக்கப்படும் உரங்களுக்கு மானியம் பெறுவது தடுக்கப்படும் என்று கலெக்டர் கணேஷ் கூறினார்.
புதுக்கோட்டை,
விவசாயிகளுக்கு நேரடி உரமானிய திட்டத்திற்கான முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம், புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி, கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது;-
புதுக்கோட்டை மாவட்டத் தில் நேரடி உரமானிய திட்டத்தின்படி உர விற்பனை உரிமம் வைத்துள்ள சில்லறை உர விற்பனையாளர்கள் ஒவ் வொருவருக்கும் (தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்கள்) ‘பாயிண்ட் ஆப் சேல்ஸ்‘ எந் திரம் வழங்கப்பட உள்ளது.
சில்லறை உர விற்பனை யாளர்கள் அனைவரும் அந்த எந்திரம் மூலமே விவசாயி களுக்கு உர விற்பனை செய்ய முடியும். உரம் வாங்க செல்லும் விவசாயிகள் தங்களது ஆதார் அடையாள அட்டையுடன் சென்று அந்த எந்திரத்தில் கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். இந்த முறையில் விவசாயிகள் உரம் வாங்கும்போது தற்போது உள்ளவாறு மானிய தொகை கழித்த விலைக்கே பணத்தை செலுத்தி உரத்தை வாங்கி செல்லலாம்.
மேலும் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்ட உரத் திற்குரிய மானியம் மட்டுமே உர உற்பத்தி நிறுவனங்களுக்கு அரசு மூலம் வழங்கப்படும். இதனால் விவசாயிகளுக்கான நேரடி உரமானிய திட்டத்தின் கீழ் விவசாயம் அல்லாத பயன்பாட்டிற்கு கொடுக்கப் படும் உரங்களுக்கு மானியம் பெறுவது தடுக்கப்படும். புதுக்கோட்டை மாவட்டத்தில் உர விற்பனை உரிமம் பெற்றுள்ள 136 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க சில்லறை உர விற்பனை நிலையங்கள், 205 தனியார் சில்லறை உர விற்பனை நிலையங்கள் உள்ளது. இவற்றிற்கான ‘பாயிண்ட் ஆப் சேல்ஸ்‘ எந்திரங்கள் ஸ்பிக் நிறுவனம் மூலம் வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்கு எனது (கலெக்டர் கணேஷ்) தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதில் நான் கண்காணிப்புக் குழு தலைவராகவும், வேளாண்மை இணை இயக்குனர், வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப் பாடு), மாவட்ட தகவல் தொழில்நுட்ப மைய அலுவலர் ஆகியோர் மாவட்ட குழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கான நேரடி உரமானிய திட்டத்தின் கீழ் விவசாயம் அல்லாத பயன் பாட்டிற்கு கொடுக்கப்படும் உரங்களுக்கு மானியம் பெறுவது தடுக்கப்படும்.