கரூர் ஜவுளி பூங்காவில் ரூ.15 கோடி செலவில் பொது வசதி மையம் தொடங்க திட்டம்
கரூர் ஜவுளி பூங்காவில் ரூ.15 கோடி செலவில் பொது வசதி மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை அதிகாரிகளிடம் உற்பத்தியாளர்கள் வழங்கினர்.
கரூர்,
கரூர் நகரில் வீட்டு உபயோகத்திற்கான திரைச்சீலைகள், தலையணை உறை, மெத்தை விரிப்பு, மேஜை விரிப்புகள், கையுறைகள், சமையல் அறையில் பயன்படுத்தப்பட கூடிய துண்டுகள், சமையலர்களுக்கான உடைகள் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றன. இவை கரூரில் இருந்து தமிழகம் முழுவதும், வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கரூரில் ஜவுளி தொழில் சார்ந்தவர்கள் தொழிலை மேம்படுத்த குழு ஒன்று அமைத்துள்ளனர். இந்த குழுவில் ஜவுளி உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட சங்கத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். இந்த நிலையில் கரூரில் ஜவுளி தொழிலை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்த முனைந்துள்ளனர்.
அந்த வகையில் கரூரில் ஆயத்த ஆடை உற்பத்தியை 6 நிறுவனத்தினர் தொடங்கி தயாரித்து வருகின்றனர். கரூர் அருகே புத்தாம்பூரில் அமைக்கப்பட்டுள்ள ஜவுளி பூங்காவில் ஜவுளி தொழில் சார்ந்தவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் பொது வசதி மையம் ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளனர். இதற்கான திட்ட அறிக்கையை மத்திய அரசின் சிறு, குறு தொழில் அமைச்சகத்தின் அதிகாரிகளிடம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் ஜவுளி தொழில் மேம்பாட்டு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று மாலை கரூரில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. கூட்டத்தில் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுசீந்திரன் பேசியதாவது:-
கரூரில் ரூ.15 கோடி செலவில் பொது வசதி மையம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் துணிகளை வெட்ட நவீன எந்திரங்கள், பிரிண்ட் செய்ய நவீன கருவிகள், எம்பிராய்டரி செய்ய தொழில் நுட்ப வசதியுடன் கூடிய எந்திரங்கள், ஆடைகளை பரிசோதிக்க நவீன ஆய்வகம் ஆகியவை அமைக்கப்பட உள்ளது. இந்த கருவிகளை தொழில் சார்ந்த அனைவரும் பயன்படுத்தலாம். ஜவுளிகளின் தரத்தினை மேம்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு வினியோகிக்கலாம். ஏற்றுமதியும் அதிகரிக்கும். புதிய தொழில் நுட்பத்தால் ஆர்டர்களும் அதிக அளவில் குவியும்.
இந்த கருவிகள் அனைத்தும் சர்வதேச தரத்திலானதாகும். இந்த வசதி மையத்தோடு சாயப்பட்டறை பூங்கா அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபடாமல் தொழில்நுட்ப வசதியுடன் சாயப்பட்டறைகள் தொடங்க முடிவு செய்துள்ளோம். இதற்கு அனைவரது ஒத்துழைப்பும் தேவை. இந்த மையம் மத்திய, மாநில அரசுகளின் அனுமதி கிடைத்ததும் ஓராண்டில் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனை தொடர்ந்து திட்ட அறிக்கையை மத்திய அரசின் சிறு, குறு தொழில்கள் அமைச்சகத்தின் கோவை மண்டல இணை இயக்குனர் சதீஷ்குமார் மற்றும் அதிகாரிகளிடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்கினர்.
கூட்டத்தில் மத்திய அரசின் சிறு, குறு தொழில்கள் அமைச்சகத்தின் கோவை மண்டல துணை இயக்குனர் சதீஷ்குமார் பேசுகையில், “திருப்பூரில் பொது வசதி மையம் அமைக்க 2 ஜவுளி நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது. கரூர் பொது வசதி மையம் திட்டம் குறித்து முழுமையாக ஆராய்ந்து அரசிற்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பின் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவோம். இந்த சேவை மையத்தோடு மட்டுமில்லாமல் திருப்பூரை போல கரூரிலும் ஜவுளி தொழிலை மேம்படுத்த நடவடிக்கை எடுங்கள்” என்றார்.
சிட்கோ மேலாளர் ஜெயலட்சுமி பேசுகையில், “கரூரில் பொது வசதி மையம் தொடங்க சிட்கோ முழு ஒத்துழைப்பு வழங்கும்” என்றார்.
கூட்டத்தில் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து, ஜவுளி பூங்கா நிர்வாக இயக்குனர் சிவக்கண்ணன், திட்ட ஆலோசகர் பத்மநாபன் உள்பட ஜவுளி தொழில் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.