அரசு போக்குவரத்து கழக பணிமனையை கல்லூரி மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம்
கூடுதல் டவுன் பஸ்களை இயக்க கோரி அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் தர்மபுரி அரசு போக்குவரத்து கழக பணிமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
தர்மபுரி,
தர்மபுரி அருகே உள்ள பைசுஅள்ளியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கடத்தூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன. இந்த கல்லூரியில் 1,050 மாணவர்கள் படித்து வருகிறார்கள். தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் இந்த மாணவர்கள் கல்லூரிக்கு சென்று வர தர்மபுரி பஸ் நிலையத்தில் இருந்து டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தர்மபுரியில் இருந்து இயக்கப்படும் டவுன் பஸ்கள் போதுமான அளவில் இல்லாததால் மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். குறித்த நேரத்தில் கல்லூரிக்கு செல்ல முடியாததால் வருகை பதிவு குறைந்து தேர்வு எழுதுவதிலும் பாதிப்பு ஏற்படுவதாக மாணவர்கள் தெரிவித்து வந்தனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண தர்மபுரியில் இருந்து கூடுதல் டவுன் பஸ்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாணவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்தநிலையில் கல்லூரிக்கு குறித்த நேரத்தில் செல்ல கூடுதல் பஸ்கள் இயக்க கோரி தர்மபுரி 4 ரோடு அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அரசு பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் நேற்று திரண்டனர். அங்கு அவர்கள் தரையில் அமர்ந்து பணிமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பணிமனையில் இருந்து அரசு பஸ்கள் வெளியில் வரமுடியாத நிலை ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி தாசில்தார் ஜெயலட்சுமி, அரசு போக்குவரத்து கழக தர்மபுரி நகர கிளை மேலாளர் செல்வராஜ், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது பாலிடெக்னிக் கல்லூரிக்கு குறித்த நேரத்தில் சென்றடையும் வகையில் கூடுதல் பஸ்களை இயக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.