கோவிலுக்கு சொந்தமான நந்தவனத்தில் ஆக்கிரமித்திருந்த ரூ.10 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நந்தவனம் தனி நபர் ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்தது. அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றி ரூ.10 கோடி மதிப்பிலான நிலத்தை வருவாய்த்துறையினர் மீட்டு இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைத்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பாத்தியப்பட்ட நிலங்கள் திருவண்ணாமலை, சென்னை உள்பட பல்வேறு இடங்களில் உள்ளன. இதில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஈசானிய லிங்கம் அருகே உள்ள அர்த்தஜாம அறக்கட்டளை நந்தவனமும் அடங்கும். இந்த நந்தவனம் சுமார் 4½ ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும்.
ஆரம்ப காலத்தில் இங்கு வளரும் செடிகளில் இருந்து பூக்கள் பறிக்கப்பட்டு கோவிலில் பூஜைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. நந்தவனத்தை பராமரித்தவர் காலப்போக்கில் ஒரு பகுதியில் மட்டும் பூச்செடி பயிரிட்டு விட்டு மற்ற இடத்தில் விவசாயம் செய்து வந்தார். அவரின் வம்சாவளிகள் நந்தவனத்தை முழுவதையும் ஆக்கிரமித்து விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்தனர். இது போன்று சின்னக்கடை வீதியில் உள்ள தானிப்பாடியார் மடமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.
எனவே மேற்கண்ட இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று தமிழ்தேசிய மக்கள் கட்சி தலைவர் சிவபாபு கடந்த 2012-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை தொடர்ந்து கடந்த 2014-ம் ஆண்டு தானிப்பாடியார் மடம் மற்றும் நந்தவனத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறையினர் அகற்றி இந்து சமயஅறநிலையத்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி முதலில் தானிப்பாடியார் மடத்தின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
ஆனால் நந்தவனத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. சில காரணங்களுக்காக ஆக்கிரமிப்பு அகற்றுவது கிடப்பில் போடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி, தாசில்தார் ரவி, உதவி போலீஸ் சூப்பிரண்டு ரவாளிபிரியா, கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் கோவில் அதிகாரிகள் குழுவினர் நேற்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டனர்.
நந்தவனத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிசை மற்றும் கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மோட்டார் உள்பட ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆக்கிரமிப்பாளர்கள் போலீசாரிடமும் அதிகாரிகளிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
எனினும் ஆக்கிரமிப்பு முழுவதும் அகற்றப்பட்டு நிலம் மீட்கப்பட்டது. இந்த நிலத்தின் மதிப்பு ரூ.10 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதற்கான பலகை வைக்கப்பட்டபின் அந்த இடத்தை இந்து சமய அறநிலையத்துறையினரிடம் வருவாய்த்துறையினர் ஒப்படைத்தனர். அந்த இடத்தை யாரும் பயன்படுத்துவதை தடுப்பதற்காக அறநிலையத்துறை அதிகாரிகள் கேட் அமைத்து பூட்டி ‘சீல்’ வைத்தனர்.