கடலூரில் நகராட்சி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு கடலூர் நகராட்சி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2017-07-11 22:15 GMT

கடலூர்

ஊதிய விகித பலன்களை வழங்க வேண்டும். மருத்துவப்படி ரூ.1,000 வழங்க வேண்டும். திருந்திய ஊதிய பலன்களை வழங்காததால் பாதிக்கப்பட்டுள்ள நகராட்சி தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு கடலூர் நகராட்சி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் நா.பக்கிரி தலைமை தாங்கினார். நிறுவன தலைவர் சிவராமன், சிறப்பு தலைவர் கருப்பையன், துணை நிறுவனர் சி.பக்கிரி, மாவட்ட செயலாளர் பழனி, மாவட்ட துணை தலைவர் தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட துணை தலைவர் குழந்தைவேலு, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன், ஓய்வு பெற்ற அடிப்படை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் பக்தவச்சலம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் அரசகுமரன், காசிநாதன், செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்