கோவில்பட்டியில் விவசாயிகள் துணியால் கைகளை கட்டிக் கொண்டு போராட்டம்

கடந்த 2 ஆண்டுகளில் பயிர் காப்பீடு பிரிமீயம் செலுத்திய விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும். வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.

Update: 2017-07-11 22:45 GMT

கோவில்பட்டி,

விவசாயிகளின் கடன்களை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததை வாபஸ் பெற்று, அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில், கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு கடந்த 5–ந்தேதி காத்திருக்கும் போராட்டம் தொடங்கியது.

ஒவ்வொரு நாளும் விவசாயிகள் ஒவ்வொரு விதமாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று 7–வது நாளாக விவசாயிகளின் காத்திருக்கும் போராட்டம் தொடர்ந்தது. விவசாயம் செய்ய முடியாமல் தங்களது கைகள் கட்டப்பட்டு உள்ளதைக் குறிக்கும் வகையில், விவசாயிகள் துணியால் தங்களது கைகளை கட்டிக் கொண்டு, கோ‌ஷங்களை எழுப்பி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் தொடரும்...

மாநில தலைவர் நாராயணசாமி கூறுகையில், பயிர் காப்பீட்டு தொகை கிடைக்கும் வரையிலும் விவசாயிகளின் போராட்டம் தொடரும் என்று கூறினார். இதில் வடக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி மாரியம்மாள் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்