கோவில் திருவிழா நடத்த அனுமதிக்க கோரி முற்றுகை போராட்டம்

கோவில் திருவிழா நடத்த அனுமதிக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்

Update: 2017-07-11 21:45 GMT

விருதுநகர்,

நரிக்குடி அருகே உள்ளது பனங்குடி. இந்த கிராமத்தில் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்சினை இருந்துவந்தது. இதனால் கோவிலில் திருவிழா நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது. இந்தநிலையில் பனங்குடியை சேர்ந்த ஒரு தரப்பினர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முத்துராஜ் தலைமையில் கோவில் திருவிழா நடத்த அனுமதி வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திருவிழா அனுமதி தராவிட்டால் ரே‌ஷன் கார்டுகளை ஒப்படைக்க போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கலெக்டர் சிவஞானம், போராட்டம் நடத்தியவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சுமுக தீர்வு காணப்பட்டதை அடுத்து போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்