உதவி பேராசிரியர் பணி
உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 84 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.;
டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் ஒன்று தேசபந்து கல்லூரி. புதுடெல்லியில் அமைந்துள்ள மத்திய கல்வி நிறுவனமான இதில் தற்போது உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 84 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள்.
உயிரி வேதியியல், தாவரவியல், வேதியியல், வணிகவியல், கணினி அறிவியல், பொருளாதாரவியல், இந்தி, வரலாறு, கணிதவியல், தத்துவவியல், இயற்பியல், அரசியல் அறிவியல், சமஸ்கிருதம், உயிரியல் போன்ற 14 பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான வயது வரம்பு, கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங் களை இணையதளத்தில் பார்க்கலாம். விருப்பம் உள்ளவர்கள், 14-7-2017-ந் தேதிக்குள் சென்றடையும் வகையில் விண்ணப்பம் அனுப்ப வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை www.deshbandhucollege.ac.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.