மத்திய அரசு நியமித்த 3 நியமன எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் ஏற்க மறுப்பு கிரண்பெடியின் கடிதத்தை திருப்பி அனுப்பினார்
மத்திய அரசு நியமித்த 3 நியமன எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் வைத்திலிங்கம் ஏற்க மறுத்தார். இது தொடர்பான கவர்னர் கிரண்பெடியின் கடிதத்தை அவர் திருப்பி அனுப்பினார்.
புதுச்சேரி,
புதுவையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப்பிரமாணம்
புதுவையில் உள்ள காங்கிரஸ் அமைச்சரவைக்கும், கவர்னர் கிரண்பெடிக்கும் இடையே ஆரம்பம் முதலே மோதல் இருந்து வருகிறது. பல்வேறு விவகாரங்களில் இருதரப்பினரும் கருத்து மோதலில் ஈடுபட்டு வந்தனர். இதுமட்டுமின்றி சமூக வலைதளங்களிலும், பத்திரிகையாளர் சந்திப்பின் மூலமாகவும் கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வந்தனர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட சட்டமன்றத்தில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை மாநில அரசு நியமித்துக் கொள்ளலாம். இதற்கான பெயர்களை கவர்னரின் பரிந்துரைக்கு அனுப்பி பின்னர் மத்திய அரசு ஒப்புதலுடன் நியமன எம்.எல்.ஏ.க்களாக கடந்த காலங்களில் மாநில அரசு நியமித்து வந்துள்ளது.
ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து திடீரென்று மத்திய அரசு அறிவித்தது. அவர்களுக்கு கவர்னர் கிரண்பெடி அவசர அவசரமாக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அரசியல் கட்சியினர் அதிர்ச்சி
இதுமட்டுமில்லாமல் நியமன எம்.எல்.ஏ.க்களை நேரடியாக நியமிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. பதவிப்பிரமாணம் செய்து வைப்பதில் சபாநாயகர் தாமதம் செய்ததால் அவர்களுக்கு நான் பதவிப்பிரமாணம் செய்துவைத்தேன். இதில் சட்ட விதிமீறல்கள் எதுவும் இல்லை என்று கவர்னர் கிரண்பெடி கருத்தும் தெரிவித்தார்.
அவரது இந்த நடவடிக்கை புதுவை ஆட்சியாளர்களையும், மற்ற அரசியல் கட்சியினரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இதைத்தொடர்ந்து மத்திய அரசையும், கவர்னர் கிரண்பெடியையும் கண்டித்து புதுவையில் கடந்த 8-ந்தேதி முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தநிலையில் கவர்னர் கிரண்பெடி சார்பில் அவரது செயலாளர் தேவநீதிதாஸ் புதுவை சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில் மத்திய அரசு பரிந்துரைத்த நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார். அவர்களை எம்.எல்.ஏ.க்களாக செயல்பட அனுமதிக்கவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
திருப்பி அனுப்பினார்
அந்த கடிதத்தை சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயர் வழங்கினார். அதில் சில குறிப்புகளை எழுதிய சபாநாயகர் வைத்திலிங்கம் அதை கவர்னருக்கே திருப்பி அனுப்பினார்.
அந்த கடிதத்தில் சபாநாயகர் எழுதிய குறிப்பு விவரம் வருமாறு:-
நியமன எம்.எல்.ஏ.க்களாக 3 பேர் நியமிக்கப்பட்ட உத்தரவில் பெயர்கள் மட்டுமே இருந்தன. அவர்கள் யார்? எந்த முகவரியில் வசித்து வருகிறார்கள்? என்பது பற்றிய விவரங்கள் எதுவும் இல்லாமல் இருந்தது. இதுபற்றி தலைமை செயலாளரிடம் விளக்கம் கேட்டு இருந்தேன். ஆனால் அதுகுறித்த விவரங்கள் எனக்கு கிடைக்கவில்லை.
மேலும் 3 பேர் நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ விவரம் எதுவும் சட்டசபை செயலாளர் அலுவலகத்துக்கு உரிய அதிகாரம் பெற்றவர்களிடம் இருந்து வரவில்லை. ஆனால் அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளர்கள். சபாநாயகர் இருக்கும்போது அவர்தான் எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கவேண்டும். அவரை மீறி கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது. இது தவறானது. எனவே இதை ஏற்க முடியாது.
இவ்வாறு அந்த கடிதத்தில் சபாநாயகர் வைத்திலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
சட்டமன்றத்துக்குள் அனுமதிக்கப்படுவார்களா?
சபாநாயகரின் இந்த முடிவு புதுவை அரசியல் வட்டாரத்தில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டமன்ற நடவடிக்கைகளை பொறுத்தவரை சபாநாயகர் எடுக்கும் முடிவே இறுதியானது. எனவே நியமன
எம்.எல்.ஏ.க்களாக அறிவிக்கப்பட்டுள்ள 3 பேரை சட்டமன்ற வளாகத்துக்குள் நுழைய அனுமதிப்பது குறித்த அதிகாரம் சபாநாயகரிடம்தான் உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களை பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் என அங்கீகரித்து சட்டமன்ற வளாகத்தில் அலுவலகம், இருக்கைகள் ஒதுக்குவதுடன் எம்.எல்.ஏ.க்களுக்கு உரிய சலுகைகளை வழங்கவேண்டும் என்று சட்டசபை செயலாளரிடம் அவர்கள் கடிதம் கொடுத்து இருந்தனர். தற்போதைய சூழ்நிலையில் அந்த கடிதம் ஏற்கப்படுமா? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
கவர்னருக்கும், ஆளுங்கட்சியினருக்கும் தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் நியமன எம்.எல்.ஏ.க்களை ஏற்க மறுத்து அதற்கான கடிதத்தை சபாநாயகர் வைத்திலிங்கம் கவர்னருக்கே திருப்பி அனுப்பி இருப்பது புதுவை அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.