பெங்களூரு மடிவாளா மார்க்கெட்டில் கட்டிட கட்டுமான பணிக்கான நிதி ரூ.21 கோடியாக உயர்வு

பெங்களூரு மடிவாளா மார்க்கெட்டில் கட்டிட கட்டுமான பணிக்கான நிதி ரூ.21 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக மந்திரி ராமலிங்கரெட்டி கூறினார்.

Update: 2017-07-10 21:39 GMT

பெங்களூரு,

பெங்களூரு மடிவாளா மார்க்கெட்டில் கட்டிட கட்டுமான பணிக்கான நிதி ரூ.21 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக மந்திரி ராமலிங்கரெட்டி கூறினார்.

போக்குவரத்துத்துறை மந்திரி ராமலிங்கரெட்டி நேற்று பெங்களூரு மடிவாளா மார்க்கெட்டில் ஆய்வு நடத்தினார். இதில் மேயர் பத்மாவதி, முன்னாள் மேயர் மஞ்சுநாத்ரெட்டி, மாநகராட்சி கமி‌ஷனர் மஞ்சுநாத்பிரசாத் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டிட கட்டுமான பணிகள் குறித்து மந்திரி ராமலிங்கரெட்டி நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வுக்கு பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

இந்த மடிவாளா மார்க்கெட்டுக்கு வரலாற்று பெருமை உள்ளது. 120 ஆண்டுகளாக இங்கு மார்க்கெட் நடக்கிறது. இந்த மார்க்கெட்டில் கட்டிடங்களை கட்ட ரூ.14 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதி தற்போது ரூ.21 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் 440 கடைகள், கழிவறைகள், வாகன நிறுத்தம் இடம், வருவாய் அலுவலகம் ஆகியவற்றை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இதுவரை 68 கடைகள் கட்டப்பட்டுள்ளன. இன்னும் 30 கடைகளை கட்டும் பணி இறுதி நிலையில் உள்ளது. இன்னும் 2 மாதங்களில் இந்த 30 கடைகளின் கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடையும். மீதமுள்ள கடைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும்.

இவ்வாறு ராமலிங்கரெட்டி கூறினார்.

மேலும் செய்திகள்