மாவட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் ரூ.3 கோடிக்கு பருத்தி விற்பனை

திருவாரூர் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் இந்த ஆண்டு இதுவரை ரூ.3 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்று இருக்கிறது.

Update: 2017-07-10 22:45 GMT
திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு பருத்தி அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பருத்தி அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. அறுவடை செய்த பருத்தியை விவசாயிகள் விற்பனை செய்து கொள்வதற்காக திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், குடவாசல், வலங்கைமான் ஆகிய இடங்களில் ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஏலம் மூலமாக பருத்தி விற்பனை வாரந்தோறும் நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு பருத்தி அறுவடை காலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக ரூ.10 கோடியே 21 லட்சத்து 51 ஆயிரத்து 954 மதிப்பில் பருத்தி விற்பனை நடைபெற்றது. இந்த ஆண்டு இதுவரை திருவாரூர் மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக 651 டன் பருத்தி விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மதிப்பு ரூ.2 கோடியே 97 லட்சத்து 58 ஆயிரத்து 612 ஆகும். 

மேலும் செய்திகள்