அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என மருந்தாளுனர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மன்னார்குடி,
தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்க திருவாரூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மன்னார்குடியில் நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் பைரவநாதன், மாவட்ட செயலாளர் தியாகராஜன், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட துணைத்தலைவர் ரவிச்சந்திரன், அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாநில தலைவர் கோவிந்தராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தஞ்சை-வேளாங்கண்ணி தேசிய நெடுஞ்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மருந்தாளுனர்களுக்கு 5 கட்ட பதவி உயர்வை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட இணைச்செயலாளர் சாமிநாதன் நன்றி கூறினார்.