தபால் நிலையத்தில் ‘ஆதார்’ அட்டையில் பெயர், முகவரி மாற்றம் செய்வதற்கான சேவை மையம்
திருச்சி தலைமை தபால் நிலையத்தில் ‘ஆதார்’ அட்டையில் பெயர், முகவரி மாற்றம் செய்வதற்கான சேவை மையத்தை மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் தொடங்கி வைத்தார்.
திருச்சி,
திருச்சி தலைமை தபால் நிலையத்தில் ஆதார் அட்டையில் பெயர், முகவரி மாற்றம், வயது, பிறந்த தேதியில் மாற்றம் ஆகிய திருத்தங்களை செய்து கொள்வதற்கான சேவை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சேவை மைய வசதியை திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் வீனாகுமாரி நேற்று தொடங்கி வைத்தார்.
அத்துடன் இந்திய அரசு ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிட்டுள்ள தங்க பத்திரங்கள் விற்பனை திட்டத்தையும் தொடங்கி வைத்தார். இந்த தங்க பத்திரமானது வருகிற 14-ந்தேதி வரை தலைமை தபால் நிலையத்தில் விற்பனை செய்யப்படும். குறைந்த பட்சமாக ஒரு கிராம் முதல் அதிக பட்சமாக 500 கிராம் வரை வாங்கி கொள்ளலாம். இதன் முதலீடு காலம் 8 வருடமாகும். தேவைப்பட்டால் 5, 6, 7 வருடங்களில் திரும்ப ஒப்படைக்கும் வசதியும் உள்ளது.
இந்த திட்டங்களை தொடங்கி வைத்து வீனாகுமாரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஆதார் அட்டையில் திருத்தம் செய்து கொள்ள ரூ.25 கட்டணம் செலுத்த வேண்டும். தங்க பத்திரங்களை பொறுத்தவரை மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட 10 தலைமை தபால் நிலையங்களில் விற்பனை செய்யப்படும். தங்க பத்திரம் விற்பனையில் திருச்சி மத்திய மண்டலம் கடந்த ஆண்டு அகில இந்திய அளவில் முதலிடத்தை பெற்றது. இந்த ஆண்டும் அதேபோல் முதலிடத்தை பெற முயற்சித்து வருகிறோம். திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்களில் விரைவில் தபால் துறை வங்கி தொடங்கப்படும்.
செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் திருச்சி மத்திய மண்டலத்தில் 39 ஆயிரத்து 350 கணக்குகள் தொடங்கப்பட்டு ரூ.174 கோடி டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது. நடப்பு நிதியாண்டில் கடந்த ஜூன் மாதம் வரை ரூ.49½ கோடி டெபாசிட் ஆகி உள்ளது. தபால் துறை வங்கிகளில் கணக்கு தொடங்கும் வாடிக்கையாளர்கள் வங்கி தொடர்பான அனைத்து பணிகளையும் மின்னணு பண பரிமாற்ற முறையில் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் பெரோஸ்முகைதீன், உதவி இயக்குனர் (வணிகப் பிரிவு) குஞ்சிதபாதம் ஆகியோர் உடன் இருந்தனர்.