தச்சு தொழிலாளியை கொன்று குளத்தில் புதைப்பு போலீசார் விசாரணை
துவாக்குடி அருகே தச்சு தொழிலாளி கொலை செய்யப்பட்டு, அவருடைய உடல் குளத்தில் புதைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவெறும்பூர்,
திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகே உள்ள குங்குமபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சியப்பன்(வயது 45). தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி செல்வி(40). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 3 பேரும் பள்ளியில் படித்து வருகிறார்கள்.
செல்விக்கும், ஆறுமுகம் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைஅறிந்த கொளஞ்சியப்பன், ஆறுமுகத்தை கண்டித்தார். இதனால் அவர்களுக்கிடையே விரோதம் ஏற்பட்டது. இதுதொடர்பாக கடந்த வாரம் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
இந்தநிலையில் கடந்த 8-ந் தேதி மொபட்டில் வெளியே சென்ற கொளஞ்சியப்பன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கொளஞ்சியப்பனின் தாயார் தனம், துவாக்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
நேற்று குங்குமபுரத்தில் உள்ள வறண்டு கிடக்கும் பெரியகுளத்தில் புதிதாக தோண்டப்பட்ட ஒரு குழி தென்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த அந்த பகுதி மக்கள், இதுகுறித்து துவாக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு வந்து அந்த குழியை தோண்டி பார்த்தபோது அதில் மொபட் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதை வெளியில் எடுத்து விசாரித்தபோது, அது மாயமான கொளஞ்சியப்பனின் மொபட் என்பது தெரியவந்தது.
இதனால் கொளஞ்சியப்பனும் கொலை செய்யப்பட்டு, அப்பகுதியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதினர். இதையடுத்து அந்த குளத்தின் பல்வேறு பகுதிகளுக்கு போலீசார் சென்று வேறு எங்காவது குழிகள் தென்படுகிறதா என்று தேடினர். அப்போது ஒரு இடத்தில் ஒரு பெரியகுழியும், அதன் அருகே ஒரு துணியும் கிடந்தது. அந்த துணி கொளஞ்சியப்பன் தலையில் முண்டாசாக கட்டியிருந்த துணி என்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று மதியம் தாசில்தார் ஷோபா மற்றும் துவாக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் முன்னிலையில் போலீசார் குழி இருந்த இடத்தை தோண்டி பார்த்தனர்.
அப்போது அந்த குழிக்குள் ஒரு பிணம் இருந்தது. அதை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தியதில், குழிக்குள் பிணமாக இருந்தது கொளஞ்சியப்பன் தான் என்று தெரியவந்தது. இதையடுத்து பிணத்தை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தாசில்தார் ஷோபா, திருவெறும்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) புகழேந்தி உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர்.
மேலும் இதுகுறித்து துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொளஞ்சியப்பனின் மனைவி செல்வியை பிடித்து, கள்ளக்காதல் பிரச்சினையில் கொளஞ்சியப்பன் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் ஆறுமுகத்தையும் தேடி வருகின்றனர். இதேபோல் ஆடு வாங்கி, விற்ற தகராறில் கொளஞ்சியப்பனுக்கும், துவாக்குடி பகுதியை சேர்ந்த சரவணனுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொளஞ்சியப்பன் உடல் தோண்டி எடுக்கப்பட்ட பெரியகுளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு 2 சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.