பெண்ணிடம் நூதன முறையில் ரூ.4½ லட்சம் அபேஸ்
ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்ற பெண்ணிடம் நூதன முறையில் ரூ.4½ லட்சம் அபேஸ் செய்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.;
மும்பை,
ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்ற பெண்ணிடம் நூதன முறையில் ரூ.4½ லட்சம் அபேஸ் செய்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
மும்பையை சேர்ந்த 26 வயது பெண் ஒருவர் சம்பவத்தன்று சாந்தாகுருஸ் பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்றார். ஆனால் அவரால் பணம் எடுக்க முடியவில்லை. இந்தநிலையில் அங்கு நின்ற ஒருவர் பெண்ணுக்கு உதவி செய்வது போல ஏ.டி.எம்.க்குள் நுழைந்தார். அவர் பெண்ணின் ஏ.டி.எம். கார்டை வாங்கி பணம் எடுக்க முயன்றார். அப்போது பெண் அவரிடம் ஏ.டி.எம். கார்டின் ரகசிய எண்ணை கூறினார். ஆனால் பணம் வரவில்லை. எனவே பெண் தனது ஏ.டி.எம். கார்டை வாங்கி கொண்டு அருகில் உள்ள வேறு ஏ.டி.எம்.மிற்கு சென்றுவிட்டார். ஆனால் அங்கும் அவரால் பணத்தை எடுக்க முடியவில்லை.இந்தநிலையில் 10 நாட்களுக்கு பிறகு அவர் வங்கியில் சென்று விசாரித்த போது அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.4½ லட்சம் எடுக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. விசாரணையில் ஏ.டி.எம்.மில் உதவி செய்துவது போல வந்த ஆசாமி பெண்ணின் ஏ.டி.எம். கார்டை வைத்து கொண்டு போலி ஏ.டி.எம். கார்டை அவரிடம் திருப்பி கொடுத்து உள்ளார். பின்னர் அவர் பெண்ணின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பல்வேறு ஏ.டி.எம்.களில் பணத்தை எடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணை நூதன முறையில் ஏமாற்றிய மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.