குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி குழந்தைகளுடன் வந்த பெண்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்
சிறுப்பத்தூர் ஊராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்க கோரி பெண்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
திருச்சி,
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் கே.ராஜாமணி தலைமையில் மாவட்ட வருவாய் அதிகாரி பஷீர் மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் கொடுத்த மனுக்களை வாங்கினார்கள்.
அப்போது மண்ணச்சநல்லூர் தாலுகா சிறுப்பத்தூர் ஊராட்சி வடக்கு சாலப்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர்கள் காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். பெண்கள் பள்ளி செல்லும் தங்களது குழந்தைகளை சீருடையுடன் அழைத்து வந்து இருந்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், வடக்கு சாலப்பட்டி கிழக்கு தெருவில் 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளன. இந்த தொட்டிகளில் 90 ஆயிரம் லிட்டர் தண்ணீர் சேமித்து வைக்க முடியும். இந்த தொட்டிகளில் இருந்து வடக்கு சாலப்பட்டி கிழக்கு தெருவில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு குடிநீர் தினமும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த குடிநீரை அவர்கள் எல்லா தேவைகளுக்கும் பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால் மேற்கு தெருவில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கிடையாது என்பதால் பொது குடிநீர் குழாய்களையே நம்பி இருக்கிறோம். இந்த குழாய் களில் தண்ணீர் வந்து பல மாதங்கள் ஆகி விட்டன. தண்ணீர் பிரச்சினையால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் கூட தினமும் சிரமம் ஏற்படுகிறது. எங்கள் தெருவிற்கும் பாகுபாடு இன்றி குடிநீர் வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்.
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் திருச்சி மாவட்ட தலைவர் முருகானந்தம் தலைமையில் செயலாளர் பெருமாள், பொருளாளர் கண்ணன் உள்பட நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு வேறு இடங்களை தேடி கண்டுபிடித்து தரும்படி அதிகாரிகள் நிர்ப்பந்தம் செய்யக்கூடாது, மூடப்பட்ட டாஸ்மாக் கடை பணியாளர்களின் கல்வி தகுதி மற்றும் பணி மூப்பு அடிப்படையில் தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களில் அவர்களை பணியமர்த்த வேண்டும், டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரிந்த 14 ஆண்டுகால பணியையும் ஓய்வு கால பலன்களுக்கான கணக்கில் எடுத்து கொள்ளவேண்டும், என்று கூறப்பட்டு இருந்தது.
மேலும் முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், குடிநீர், தெருவிளக்கு, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஏராளமானவர்கள் இந்த கூட்டத்தில் மனு கொடுத்தனர்.