அமெரிக்க குடியுரிமை பெற்ற தூத்துக்குடி கம்ப்யூட்டர் என்ஜினீயர் கொலை?
அமெரிக்க குடியுரிமை பெற்ற தூத்துக்குடி கம்ப்யூட்டர் என்ஜினீயர் கொலை செய்யப்பட்டதாகவும், நெல்லை அருகே கல்குவாரியில் காருடன் உடல் மூழ்கடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி ரைஸ்மில்தெருவை சேர்ந்த சுப்பையா மகன் முத்துகிருஷ்ணன் (வயது 47). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் அமெரிக்க குடியுரிமை பெற்று நீண்டகாலமாக அங்கு வசித்து வந்தார். இவருடைய மனைவி முத்துசெல்வி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
முத்துகிருஷ்ணன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடிக்கு வந்தார். அப்போது, கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவர்கள் விவாகரத்து பெற முடிவு செய்தனர். முத்துகிருஷ்ணன் விவாகரத்து பெறுவதற்காக பாளையங்கோட்டையை சேர்ந்த ஒரு வக்கீலை நாடினார். கடந்த மே மாதம் 22-ந் தேதி பாளையங்கோட்டைக்கு வக்கீலை பார்க்க செல்வதாக கூறிவிட்டு காரில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து அவருடைய தாய் அம்மைமுத்து தூத்துக்குடி தென்பாகம் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் மே மாதம் 25-ந் தேதி தென்பாகம் போலீசார், முத்துகிருஷ்ணன் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதே நேரத்தில் அம்மைமுத்து, தனது மகனை கண்டுபிடித்து தருமாறு மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இதனால் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். அவருடைய செல்போன் எண்ணை வைத்து, அதனை தொடர்பு கொண்டவர்களின் விவரங்களை சேகரித்து விசாரணை நடத்தினர். முத்துகிருஷ்ணன் காணாமல் போன அன்று, நெல்லையை சேர்ந்த ஒரு லாரி டிரைவர், முத்துகிருஷ்ணனிடம் பேசி இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அந்த டிரைவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. முத்துகிருஷ்ணன் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்காக பாளையங்கோட்டையில் உள்ள ஒரு வக்கீலை சந்தித்து உள்ளார். அதன்பிறகு அடிக்கடி வக்கீல் அலுவலகத்துக்கு சென்று வந்தாராம். அப்போது அங்கு இருந்த டிரைவரின் மனைவிக்கும், முத்துகிருஷ்ணனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனை அறிந்த அந்த டிரைவர், முத்துகிருஷ்ணனை பலமுறை கண்டித்தாராம். ஆனாலும் முத்துகிருஷ்ணன் பழக்கத்தை துண்டிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கடந்த மே மாதம் 19-ந் தேதி முத்துகிருஷ்ணனுக்கும், அந்த டிரைவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் முத்துகிருஷ்ணன், அந்த டிரைவரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்று விட்டாராம். இதனால் ஆத்திரம் அடைந்த டிரைவர், முத்துகிருஷ்ணனை கொலை செய்ய முடிவு செய்து உள்ளார்.
மே மாதம் 22-ந் தேதி முத்துகிருஷ்ணன் தனது காரில் நெல்லைக்கு வந்ததை அறிந்த அந்த டிரைவர், தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து பாளையங்கோட்டையில் தயாராக நின்றனர். அவர் பாளையங்கோட்டைக்கு வந்த போது, 4 பேரும் சேர்ந்து முத்துகிருஷ்ணனை காருடன் காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்றனர். அங்கு வைத்து அவரை வெட்டிக் கொலை செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அவருடைய உடலை சாக்குப்பையில் கட்டி முத்துகிருஷ்ணனின் காருக்குள் வைத்து உள்ளனர். அந்த காரை 4 பேரும் சேர்ந்து நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரத்துக்கு கொண்டு சென்றார்களாம். அங்கு தண்ணீர் தேங்கி கிடந்த கல்குவாரிக்குள் முத்துகிருஷ்ணனின் உடலுடன் காரை தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் கார் கல்குவாரி தண்ணீரில் மூழ்கி உள்ளது. அதன்பிறகு 4 பேரும் தப்பி சென்று விட்டார்களாம்.
இதைத் தொடர்ந்து தென்பாகம் போலீசார் அந்த டிரைவரின் நண்பர்களை தேடி வருகின்றனர். அதே நேரத்தில் ராஜவல்லிபுரத்தில் உள்ள கல்குவாரியில் மூழ்கடிக்கப்பட்டதாக கூறப்படும் கார் மற்றும் முத்துகிருஷ்ணன் உடலையும் மீட்பதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.