100 வாகனங்கள் சிறைபிடிப்பு மண் அள்ளும் பணி பாதியில் நிறுத்தம்
மேச்சேரி அருகே மண் அள்ள வந்த 100 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன. இதனால் மண் அள்ளும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.;
மேச்சேரி,
சேலம் மாவட்டம் மேட்டூர் அணை நீர்த்தேக்க பகுதியான மேச்சேரி அருகே உள்ள கூனாண்டியூரில் வண்டல் மண் அள்ள தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது.
தற்போது வண்டல் மண் அள்ளும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் வண்டல் மண் எடுக்காமல் செம்மண் அள்ளுவதாகவும், குறிப்பிட்ட பகுதியில் ஆழமாக அள்ளுவதாகவும், விவசாய நிலங்களுக்கு செல்லாமல் செம்மண் சூளைகளுக்கு எடுத்துச்செல்வதாகவும் கூறி கூனாண்டியூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராஜாக்கண்ணு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து நேற்று காலை 9 மணியளவில் மண் அள்ள வந்த பொக்லைன், டிப்பர் லாரி, டிராக்டர்கள் என சுமார் 100 வாகனங்களை சிறைபிடித்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் மேச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு சென்று போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
மாலை 3 மணி வரை போராட்டம் முடிவுக்கு வரவில்லை. அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, பொதுப்பணித்துறை அலுவலர்கள் 3 பேர் உள்ளனர். அவர்கள் கண்காணிப்பில் 3 பொக்லைன் எந்திரங்கள் மட்டும் மண் அள்ளும் பணியை தொடங்க வேண்டும், என்றனர்.
ஆனால் மண் அள்ள வந்தவர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. 3 பொக்லைன் எந்திரங்கள் மூலம் மட்டும் மண் அள்ளினால் நீண்டநேரம் காத்திருக்க வேண்டியது இருக்கும், என்றனர். பின்னர் மண் அள்ளாமல் அங்கிருந்து வாகனங்களை எடுத்துச்சென்றனர்.இதனால் மண் அள்ளும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.