திண்டுக்கல் நாகல்நகரில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலைமறியல்

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 50 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை.

Update: 2017-07-09 22:00 GMT

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 18–வது வார்டில் சுக்கான்மேடு, போடிநாயக்கன்பட்டி உள்பட பல்வேறு குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த 50 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் காலிக்குடங்களுடன் நாகல்நாகர் மேம்பாலம் அருகே மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த நகர் வடக்கு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அழகுபாண்டி பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். உடனே அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக திண்டுக்கல்– நத்தம் சாலையில் சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்