லாரி–மினி வேன் மோதல்; ஒருவர் பலி

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள பூசாரிப்பட்டியை சேர்ந்தவர் செல்வம் மகன் சிவா.

Update: 2017-07-09 21:15 GMT

சிங்கம்புணரி

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள பூசாரிப்பட்டியை சேர்ந்தவர் செல்வம் மகன் சிவா. இவர் சிவகங்கையில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் கலந்துகொள்வதற்காக தனக்கு சொந்தமான காளையுடன் மினி வேனில் சென்றார். போட்டி முடிந்த பின்னர் மீண்டும் பூசாரிப்பட்டி நோக்கி அவர் சென்றுக் கொண்டிருந்தனர். மினி வேனின் பின்னால் காளையை பிடித்தபடி சிவாவும், அதே ஊரை சேர்ந்த சுந்தர் என்பவரும் சென்றதாக தெரிகிறது. மினிவேனை மற்றொருவர் ஓட்டி வந்தார். சிங்கம்புணரி அருகே திருக்களாப்பட்டி அருகே மினி வேன் வந்தபோது, லாரி ஒன்று மோதியது. இதில் சிவாவும், சுந்தரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த சிவா சம்பவ இடத்திலேயே பலியானார். சுந்தர் காயத்துடன் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்து எஸ்.வி.மங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்