மகிழ்ச்சி தரும் ஓவியங்கள்
ஆஷா, பிந்து இருவரும் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஓவிய சகோதரிகள். ‘பெயிண்டிங் சிஸ்டர்ஸ்’ என்று அழைக்கப்படும் இவர்களில் அக்காள் ஆஷாவுக்கு மியூரல் ஓவியங்கள் தீட்டுவதில் ஆர்வம் அதிகம்.
ஆஷா, பிந்து இருவரும் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஓவிய சகோதரிகள். ‘பெயிண்டிங் சிஸ்டர்ஸ்’ என்று அழைக்கப்படும் இவர்களில் அக்காள் ஆஷாவுக்கு மியூரல் ஓவியங்கள் தீட்டுவதில் ஆர்வம் அதிகம். தங்கை பிந்து எகிப்து நாட்டு கலைச்சாயல் கொண்ட ஓவியங்களை படைக்கிறார். இவர்கள் இருவரும் தங்கள் அலுவலக பணிகளை ராஜினாமா செய்துவிட்டு, கலை வாழ்க்கையில் ஆழமாக தடம்பதித் திருக்கிறார்கள்.
இவர்களுக்கு ஓவியத்தின் மீது எப்படி ஈர்ப்பு வந்தது?
“எங்கள் தாயார் சரோஜினிக்கு கடவுள் பக்தி அதிகம். ஒவ்வொரு வியாழக்கிழமையும் நான் அம்மாவோடு பத்மனாபசாமி கோவிலுக்கு செல்வேன். அப்போது என்னை அங்குள்ள சுவர் ஓவியங்கள் வசீகரிக்கும். அந்த ஓவியங்கள் விளக்கும் கதைகளையும் ஆர்வமாக கேட்பேன். அந்த காலத்திலே, இயற்கை வண்ணங்களை பயன்படுத்தி சிறப்பாக ஓவியங்களை எப்படி உருவாக்கினார்கள் என்றும் சிந்திப்பேன். அந்த சிந்தனையும், அது தொடர்பான தேடுதலும்தான் என்னை மியூரல் ஓவியக்கலை பற்றி கற்க தூண்டியது. கற்றுக்கொண்டதும் அதையே தொழிலாக செய்யும் எண்ணம் உருவானது” என்று ஆஷா சொல்கிறார்.
இவர் அமைதியாக இருந்து ஓவியம் தீட்டுவதை தங்கை பிந்து கவனித்துக்கொண்டிருப்பாராம். பின்பு அதில் சில திருத்தங்களை சொல்வாராம். திருத்தத்திற்கு பிறகு ஓவியம் மேலும் சிறப்பு பெற்றிருக்கிறது.
பிந்து பள்ளியில் சமூக விஞ்ஞான பாடத்தில் அதிக அக்கறை செலுத்தியிருக்கிறார். ஆசிரியர் பாடம் நடத்தும்போது அதில் எகிப்து கலாசாரம் பற்றிய விளக்கம் பிந்துவுக்கு ரொம்பவும் பிடித்துப்போயிருக்கிறது. ஆசிரியர் ஒவ்வொரு விஷயத்தையும் வார்த்தைகளாக விளக்கும்போது பிந்து அதை எல்லாம் காட்சிகளாக்கி தன் மனக்கண்ணில் கண்டிருக்கிறார்.
“பிரமிடுகள், மம்மிகள் பற்றி எல்லாம் ஆசிரியர் விளக்கும்போது நான் தன்னை மறந்து கேட்டுக்கொண்டிருப்பேன். அவைகள் எப்படி இருக்கும் என்று தேடத் தொடங்கினேன். இன்டர்நெட் மூலம் பல கோணங்களில் அவைகளை காண முடிந்தது. எகிப்து கலாசாரத்தின் மீது எனக்கு ஏற்பட்ட ஆர்வம், பின்பு அதை வரைய வேண்டும் என்ற ஆசையை தூண்டியது. நானும் வரைந்தேன். எகிப்து ஓவியங்களை அதற்கான பாப்பிரஸ் பேப்பர்களில்தான் தீட்டவேண்டும். ஆனால் நான் சாதாரண பேப்பர் களில் எல்லாம் அதை வரைவேன். அந்த ஒவியங்களில் ஆபரணங்கள் நிறைய வரும். அவைகளை எல்லாம் வேறுபடுத்திக்காட்டுவதற்காக அடர் நிறங்களை பயன்படுத்தவேண்டும். எகிப்திய கலாசாரத்தை ஆழ்ந்து கவனித்த பின்பே, அந்த ஓவியங்களையும் சிறப்பாக தீட்டமுடிந்தது” என்கிறார், பிந்து.
இவர்கள் இருவருமே சிறுவயதில் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளை தயாரித்து, தோழிகளுக்கு வழங்கி தங்களிடம் இருந்த கலை உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பிற்காலத்தில் தங்கள் கலைஆற்றலை மெருகூட்டி பரிசுப் பொருட்களை உருவாக்கி தோழிகளுக்கு வழங்கி, பாராட்டுகளை பெற்றிருக்கிறார்கள்.
சகோதரிகள் இருவரும் வெவ்வேறு துறை சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஆஷா படித்துவிட்டு, தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணிக்கு சேர்ந்தார். பிந்து ‘பெண்கள் கமிஷன்’ அமைப்பு சார்ந்த பணியில் சேர்ந்தார். வருமானம் வந்துகொண்டிருந்தாலும் வாழ்க்கையில் திருப்தி ஏற்படாத தால், வேலைகளில் இருந்து விலகி, கற்ற கலைகளை தொழிலாக்கிக்கொண்டார்கள். அதன் மூலம் மகிழ்ச்சியை நிரந்தரமாக்கி யிருக்கிறார்கள்.
தங்களால் மாதம் இருபதாயிரம் ரூபாய் சம்பாதிக்க முடிகிறது என்கிறார்கள். தங்கள் படைப்புகளை நண்பர்கள் வழியாக விற்பனை செய்கிறார்கள். அடுத்து ஆன்லைன் மூலமாக தொழிலை மேம்படுத்த முயற்சிக்கப்போவதாகவும் சொல்கிறார்கள்.
“அம்மன், கிருஷ்ணர், கணபதி போன்ற ஓவியங்களைத்தான் நான் அதிகம் படைத்திருக்கிறேன். குருவாயூர் கோவிலுக்காக கிருஷ்ணர் ஓவியம் ஒன்றை உருவாக்கிக்கொடுத்தேன். நான் வரைந்த ஓவியங்களில் அதுதான் எனக்கு ரொம்பவும் பிடித்தமானது. எனக்கு இந்த கலையில் ஆர்வம் ஏற்பட கடவுள்தான் காரணம். அதனால் ஓவியத்தை கடவுளுக்கு சமர்ப்பணம் செய்தபோது மெய்சிலிர்த்துப்போனேன்” என்கிறார், ஆஷா.
ஓவிய சகோதரிகள் இப்போது கலைப்படைப்புகளை உருவாக்குவதோடு, ஆர்வமுள்ளவர்களுக்கு கற்றுக்கொடுக்கவும் செய்கிறார்கள். அடுத்து இவர்கள் புடவைகளில் எகிப்து, மியூரல் ஓவியங்களை தீட்ட திட்டமிட்டிருக்கிறார்கள்.