வீரமலைப்பகுதியில் போலீசார் அதிரடி சோதனை வெடிக்காத 26 ராணுவ குண்டுகளை கைப்பற்றினர்
இரும்பு கடையில் குண்டு வெடித்து ஒருவர் பலியான சம்பவம் தொடர்பாக வீரமலைப்பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் வெடிக்காமல் கிடந்த 26 ராணுவ குண்டுகளை கைப்பற்றினர்.
வையம்பட்டி,
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வீரப்பூர் அருகே உள்ள வீரமலை அடிவாரத்தில் ராணுவ வீரர்களின் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறும். இந்த பயிற்சியின் போது அந்த பகுதியில் சுமார் 15 நாட்கள் வரை ராணுவத்தினர் முகாமிட்டிருப்பார்கள். அந்த பகுதியில் பொதுமக்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கும்.
ராணுவ வீரர்கள் பயிற்சியை முடித்துச் சென்ற பின்னர் தான், அந்த பகுதி மக்கள் கால்நடைகளை மேய்க்க மலைப்பகுதிக்கு செல்வார்கள். அப்படி செல்லும் பொதுமக்கள் அந்த பகுதியில் ராணுவ வீரர்கள் பயன்படுத்திய வெடித்த மற்றும் வெடிக்காத குண்டுகளை எடுத்துச் சென்று பழைய இரும்பு கடைகளில் விற்று விடுவார்கள். பொதுமக்கள் கொடுக்கும் குண்டுகளை வாங்கும் பழைய இரும்பு கடைக்காரர்கள் அவை வெடித்த குண்டுகளா? அல்லது வெடிக்காத குண்டுகளா? என்பது தெரியாமல் உடைக்கும் போது, வெடிக்காத குண்டுகள் இருப்பின் அவை வெடித்துச் சிதறி உயிரிழப்பு ஏற்படுகிறது. இதுபோன்று பலர் உயிரிழந்துள்ள நிலையில் சமீபத்தில் மணப்பாறையில் இதுபோன்று பழைய இரும்பு கடையில் ராணுவத்தினர் பயன்படுத்தும் வெடிகுண்டு வெடித்து மாரியப்பன் என்ற கடை ஊழியர் உயிரிழந்தார்.
இதனால் வீரமலைப்பகுதியில் அதிகளவில் வெடிக்காத குண்டுகள் இருப்பதாகவும், அவை எப்போது வெடிக்குமோ என்று தெரியாமல் அந்த பகுதி பொதுமக்கள் நிம்மதியை இழந்து தவித்தனர். இந்தநிலையில் நேற்று காலை வீரமலைப்பகுதிக்கு திருச்சி மாநகர வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அச்சுதன் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் வந்தனர். இதேபோல் மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) சாமிநாதன் தலைமையில், வையம்பட்டி இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசாரும் வீரமலை பகுதிக்கு சென்றனர். பின்னர் அவர்கள் வீரமலை அடிவாரத்தில் அங்குலம், அங்குலமாக அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் ராணுவத்தினர் பயன்படுத்தும் பல்வேறு வகையான 26 வெடிக்காத குண்டுகளை கைப்பற்றினர். அந்த குண்டுகளை தரம் பிரித்து, அட்டைப்பெட்டிகளில் மண்ணைக் கொட்டி அதன் மேல் குண்டுகளை வைத்தனர். பின்னர் அந்த குண்டுகளை போலீஸ் வேனில் வைத்து எடுத்துச் சென்றனர்.
கைப்பற்றப்பட்ட குண்டுகள் அனைத்தும் திருச்சி ராணுவ முகாமிற்கு எடுத்துச் செல்லப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெடிக்காத குண்டுகளை போலீசார் எடுத்துச் சென்றதால் அந்தபகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.