நீதித்துறையின் வளர்ச்சிக்கு தேவையான நிதி ஒதுக்கப்படும் முதல்–மந்திரி சித்தராமையா பேட்டி
நீதித்துறையின் வளர்ச்சிக்கு தேவையான நிதி ஒதுக்கப்படும் என்று முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.
பெங்களூரு,
நீதித்துறையின் வளர்ச்சிக்கு தேவையான நிதி ஒதுக்கப்படும் என்று முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.
ஊழியர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள்பெங்களூரு பையப்பனஹள்ளி அருகே என்.ஜி.இ.எப். லே–அவுட்டில் ஐகோர்ட்டில் பணியாற்றும் ஊழியர்களுக்காக புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அதன் திறப்பு விழா நேற்று காலையில் நடைபெற்றது.
விழாவில் முதல்–மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு புதிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கான கல்வெட்டை திறந்து வைத்து பேசியதாவது:–
அரசின் மற்றொரு சாதனைஇந்தியாவில் முதல் முறையாக நமது மாநிலத்தில் ஐகோர்ட்டில் பணியாற்றும் ‘சி‘ மற்றும் ‘டி‘ குரூப் ஊழியர்களுக்காக வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு நிதி ஒதுக்குவதாக கூறி இருந்தது. ஆனால் மத்திய அரசிடம் இருந்து எந்த நிதியும் வரவில்லை. மாநில அரசின் நிதி மூலமாகவே குடியிருப்பு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதற்காக அரசு ரூ.191 கோடி செலவு செய்துள்ளது.
எந்த ஒரு மாநில அரசும் நீதித்துறைக்காக இதுபோன்ற வசதிகளை செய்து கொடுத்ததில்லை. அந்த வகையில் கர்நாடக அரசின் மற்றொரு சாதனையாகும். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் ‘லிப்ட்‘. குடிநீர், கழிவுநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளது.
தேவையான நிதி ஒதுக்கப்படும்நீதித்துறையின் வளர்ச்சிக்காக கர்நாடக அரசு அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க தயாராக உள்ளது. நீதிமன்றங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக கர்நாடகம் இருந்து வருகிறது. நீதித்துறையின் வளர்ச்சிக்காகவும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளவும் தேவையான நிதி ஒதுக்கப்படும்.
இவ்வாறு முதல்–மந்திரி சித்தராமையா பேசினார்.
இந்த விழாவில் கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.கே.முகர்ஜி, சட்டத்துறை மந்திரி டி.பி.ஜெயச்சந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.