நகைக்கு பாலீஸ் போடுவதாக கூறி பெண்ணிடம் நூதன மோசடி பீகார் வாலிபர்கள் 2 பேர் கைது

பேரளம் அருகே நகைக்கு பாலீஸ் போடுவதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் மோசடி செய்த பீகார் மாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-07-08 22:15 GMT
நன்னிலம்,

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள காளியாகுடியை சேர்ந்தவர் வசந்தி (வயது 52). சம்பவத்தன்று இவரது வீட்டுக்கு வந்த 2 வாலிபர்கள் நகைக்கு பாலீஸ் போடுவதாக கூறி வசந்தியிடம் நகையை கேட்டுள்ளனர். இதற்கு அவர் தன்னுடைய 3¾ பவுன் சங்கிலியை பாலீஸ் போட கொடுத்துள்ளார். அப்போது வசந்தியின் மகன் செந்தில் வீட்டுக்கு வந்துள்ளார். பாலீஸ் போட்ட உடன் நகையின் எடையை செந்தில் சரிபார்த்த போது 3 பவுன் இருந்தது தெரியவந்தது.


இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பேரளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த குந்தன்குமார்ராம் (22), பவன்குமார்ராம் (22) என்பதும், வசந்தியின் நகைக்கு பாலீஸ் போடுவதாக கூறி நூதன முறையில் மோசடி செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்